ஆகஸ்ட் 12ல் லத்தி வெளியீடு | சிவாஜி குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் மற்றொரு நடிகர் | 20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் மகாநதி ஷங்கர் | பத்து தல படத்திற்கு தயாரான சிம்பு | சேரன் இயக்கத்தில் ஆரி, திவ்ய பாரதி நடிக்கும் புதிய வெப்சீரிஸ் | விஜயின் 67வது படம்: உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | விடுதலை படத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு பெரிய கிராமப்புற செட்! | வெளிநாட்டில் பட்டம் பெற்ற சரத்குமார் - ராதிகாவின் மகன் | சிறு பட்ஜெட் படங்களை வெளியிட உதயநிதிக்கு சீனு ராமசாமி கோரிக்கை! | நடிகையாக களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரி! |
டிஸ்கவரி டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி, 'இன் டு த வைல்ட், வித் பியர் கிரில்ஸ்'. இந்நிகழ்ச்சியில் உலகில் உள்ள பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். ஏதாவது ஒரு காட்டிற்கு பிரபலங்களை வரவழைத்து அங்கு சில சாகச செயல்களுடன் அவர்களை பியர் கிரில்ஸ் பேட்டி எடுப்பதுதான் இந்நிகழ்ச்சி.
இன்று இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அது குறித்து பியர் கிரில்ஸ் டுவிட்டரில் ஒரு புதிய பதிவிட்டுள்ளார். அதில், “இந்நிகழ்ச்சி குறித்து இந்தியாவில் எழுந்துள்ள எதிர்பார்ப்பு பிரமாதமாக உள்ளது. லட்சக்கணக்கான ரசிகர்களின் காத்திருப்பு முடிந்தது, ஆக்ஷன் தான் ஆரம்பமாக வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் டிவி பேட்டிகளை அதிகமாகத் தந்ததில்லை. எப்போதாவது ஒரு முறைதான் அதிசயமாகத் தருவார். இன்றைய டிவி பேட்டியில் அவரைப் பார்ப்பதற்கு அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, பலரும் காத்திருக்கின்றனர்.