டிசம்பர் 23ல் வருகிறான் 'ருத்ரன்' | சமந்தா பாணியில் கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி! | ‛யானை' படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த ரம்பா | லைக்ஸ் அள்ளிய விக்னேஷ் சிவனை நயன்தாரா கட்டி அணைத்த புகைப்படம் | இரண்டாவது திருமணம் - ரசிகருக்கு அமலா பால் கொடுத்த பதில்! | ராக்கெட்டரி படம் குறித்து உரையாடிய மாதவன்- சூர்யா | கதிர் - திவ்யபாரதி இணையும் ‛லவ் டுடே' | அரசியல் யோசனை இல்லை: நடிகர் அருள்நிதி ‛பளிச்' | மகன் விஜய் வராமல் பிறந்தநாள் கொண்டாடிய எஸ்ஏ சந்திரசேகர் | மூன்று வருடங்களுக்குப் பிறகு சாய் பல்லவியின் தமிழ் ரிலீஸ் |
பன்முக திறமையாளர் நடிகர் விசு நேற்று(மார்ச் 22) காலமானார். கொரோனா அச்சம் காரணமாக திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்த முடியாத சூழல். இதனால் சமூகவலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினியின் பல படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் விசு. அதன்காரணமாக அவருக்கு சமூகவலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார் ரஜினி.
அதில், ‛‛என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர், ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விசு அவர்களின் மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்''. என பதிவிட்டுள்ளார்.
விவேக் இரங்கல்
நடிகர் விவேக் டுவிட்டரில், ‛‛மிக நேர்மையாக, உண்மையாக, கண்ணியமாக அதே நேரம் கண்டிப்பாக வாழ்ந்து, நம்மை பிரிந்து இருக்கும் விசுவின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் இதய அஞ்சலி. நேரில் வந்து இறுதி மரியாதை செய்ய முடியாததற்ற்கு வருந்துகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.