சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு சினிமா பிரபலங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சிலர் இது குறித்து அறிவுரைகள் கூறி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா, வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாம் பரப்ப வேண்டிய ஒரே விஷயம் விழிப்புணர்வு தான். ஜல்லிக்கட்டு, வெள்ளம், புயல் என வெளியே வந்து போராடிய நாம், இப்போது வீட்டுக்குள் இருந்தே போராடுவோம். சீனாவை விட இத்தாலியில் கொரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்பட காரணம், மக்கள் அறியாமையால் வெளியில் சுற்றியது தான். இந்தியா இன்னொரு இத்தாலி ஆகிவிடக் கூடாது.
அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டும் வெளியில் செல்லுங்கள். கூட்டம் கூட்டமாக செல்ல இது வெக்கேஷன் டைம் அல்ல, பாதுகாப்பாக குடும்பத்துடன் இருக்க வேண்டிய நேரம். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர், தன்னை தனிமைப்படுத்தி கொள்ளாமல் வெளியில் செல்வதன் மூலம் அவரை சுற்றியுள்ள அத்தனை பேரும் பாதிக்கப்படுகின்றனர். அப்படியொரு மன்னிக்க முடியாத தவறை செய்ய மாட்டீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அஞ்சுவது அஞ்சாமை பேதமை. பயப்பட வேண்டிய விஷயத்துக்கு பயப்படாமல் இருப்பது முட்டாள் தனம் என்பார்கள். இந்த விழிப்புணர்வை அனைவரிடமும் பரப்புங்கள். குறிப்பாக வயதானவர்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வோம். கொரோனாவை தடுக்க அடுத்த 2 வாரங்கள் மிக முக்கியமானது என்கிறார்கள். எச்சரிக்கையுடன் இருப்போம். வருமுன் காப்போம்.