Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனாவை விட கொடூரமானவன் மனிதன்: பாலசரவணம் ஆதங்கம்

21 மார், 2020 - 18:57 IST
எழுத்தின் அளவு:
Actor-Balasaravanan-angry-video

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால், ஹேண்ட் சானிட்டைசர் எனப்படும் கிருமி நாசினியை பயன்படுத்தி கைகளை வைரஸ் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. வெளியில் செல்லும்போது, முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

ஆனால், சில கடைகளில் முக கவசங்கள் மற்றும் ஹேண்ட் சானிட்டைசர்கள் போன்றவை வழக்கத்தை விடவும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால் கடும் கோபம் அடைந்த நடிகர் பாலசரவணன், கொரோனா வை விட ஆபத்தானவன் மனிதன்...மனிதகொரோனா என ஆத்திரம் பொங்க குறிப்பிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில் ஆத்திரத்தோடு அவர் கூறியிருப்பதாவது: மூன்று நாட்களுக்கு முன், வீட்டில் ஹேண்ட் சானிட்டைசர் தீர்ந்து விட்டது. அதனால், அதை வாங்குவதற்காக கடைக்கு போனேன். அங்கு அறுபது ரூபாய் விலையுள்ள சானிட்டைசர் 135 ரூபாய் என்று கூறினார்கள். அது குறித்து, கடையில் இருந்தவரிடம் கேட்டேன். நான் என்ன செய்ய முடியும்; நான் இங்கே வேலைதான் பார்க்கிறேன் என்று கூறினார். அவரிடம் சண்டைப் போட்டு பயனில்லை என முடிவெடுத்து, சானிடைசரை வாங்கி வந்து விட்டேன்.

இன்று எனது நண்பர்களுடன் காபி குடிக்க ஒரு கடைக்கு போனேன். அங்கு கைகளை சுத்தம் செய்ய சானிட்டைசர் கொடுத்தனர். அவர்களும் எழுபத்தைந்து ரூபாய் சானிட்டைசரை, 110 ரூபாய் கொடுத்து வாங்கியதாக தெரிவித்தனர். என்னுடன் வந்த மற்ற நண்பர்களும், இதே போலவே, அதிக விலை கொடுத்து சானிட்டைசர் வாங்கியதாகக் கூறினார்கள்.

மக்கள் அதிகமாக சானிட்டைசர், மாஸ்க் போன்ற பொருட்களை வாங்குகின்றனர் என்பதை அறிந்து, வேண்டுமென்றே கூடுதல் விலைக்கு அத்தியாவசிய பொருட்களை விற்கின்றனர். அவசரமான ஒரு சூழ்நிலையில் லாப நோக்கத்திற்காக பயன்படுத்துவது எவ்வளவு கேவலம். கொரோனாவை விட மனிதன் தான் கொடூரமானவன். இந்த மாதிரி நேரங்களில், அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறைத்து கொடுக்க வேண்டும். வசதி இல்லாதவர்கள், கூடுதல் விலை கொடுத்து எப்படி இந்தப் பொருட்களை வாங்குவர்?

இந்த ஊரில் இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் சாதி ஒழியாது, ஏற்றத் தாழ்வு மாறாது, எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. ஒரு ஆணியும் புடுங்க முடியாது.

இவ்வாறு மிகக் கோபமாக அந்த வீடியோவில் பாலசரவணன் பேசியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
விலகி இருங்க... பாதுகாப்பாக இருங்க... 2 வாரத்தை சரியா பயன்படுத்துங்க... கமல் விழிப்புணர்வுவிலகி இருங்க... பாதுகாப்பாக இருங்க... 2 ... விஜயகாந்தை சந்தித்த யோகிபாபு ஏன்? விஜயகாந்தை சந்தித்த யோகிபாபு ஏன்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

A P - chennai,இந்தியா
23 மார், 2020 - 08:43 Report Abuse
A P ( சா(ஜா)தி ஒழிவதற்கும், ஏற்ற தாழ்வுக்கும்) தனது இந்த செய்திக்கு என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. டாஸ்மாக் தொடர்பு இவருக்கு இருக்குமேயானால், இவருக்கும் மற்ற குடிகாரர்களுக்கும் ஏற்ற தாழ்வு எங்கிருந்து வரும். டாஸ்மாக் உபயோகிப்பவர்கள் எல்லோரும் குடிகாரர்களே
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
23 மார், 2020 - 07:33 Report Abuse
Bhaskaran Mayilayil Kaikani vaangaponen iththaan samayamenruvilayai irandu, madangaaga etrivittanar ivargalai yaar ketpathu
Rate this:
sankar - Nellai,இந்தியா
22 மார், 2020 - 10:54 Report Abuse
sankar உண்மை - இந்த நேரத்தில் காசுக்கு அலையும் - பிணம் தின்னி கழுகுகள் - கொரானா கொண்டுபோய்விடும் ஜாக்கிரதை
Rate this:
KalyanaSundaram K.M - Tirunelveli,இந்தியா
22 மார், 2020 - 09:28 Report Abuse
KalyanaSundaram K.M மனிதன் நல்லவன் ஆனால் மனித கூட்டம் பொல்லாதது. ஆசை இதற்கு காரணம். ஆசை உருவாக Comparison of life ஒரு காரணம்.
Rate this:
22 மார், 2020 - 07:53 Report Abuse
Narayanan K மனிதன் எப்போதுமே கொடியவன் தான். தினசரி நிகழ்வுகளை கூர்ந்து கவனியுங்கள்.... போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை படைத்தானே பாடல் நினைவுக்கு வருகிறது.
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in