'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் | நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தகவல் வதந்தி | ஜப்பானில் 100 நாட்கள் சாதனை படைத்த 'ஆர்ஆர்ஆர்' | சுதந்திர போராளி கதாபாத்திரத்தில் புகழ் | திலீப் படத்தில் இணைந்த ஜீவா |
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மீனா. திருமணத்துக்கு பின், படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். ஒரு குழந்தைக்கு தாயாகி, அவர் ஓரளவுக்கு வளர்ந்த பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். குழந்தை பெற்றுக் கொண்ட கதாநாயகிகளை பெரும்பாலும், அம்மா வேடத்துக்குத்தான் அழைப்பர். ஆனால் மீனாவோ எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், கதாநாயகனின் அம்மாவாக நடிக்க மாட்டேன் எனக் கூறி அதில் உறுதியாகவும் இருக்கிறார்.
சிவா-ரஜினி கூட்டணியில் உருவாகும் அண்ணாத்த படத்திலும், வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார் மீனா. இது குறித்து மீனா கூறியிருப்பதாவது: படத்தில் அம்மா வேடத்தில் தான் நடிக்க வேண்டும் என்றால், நான் நடிப்புக்கே முழுக்கு போட்டு விடலாம் என நினைக்கிறேன். அந்த வேடம் எனக்குப் பிடிக்காததல்ல. ஆனால், எனக்குப் பிடித்த வேடங்களில் அது முக்கியமானதாக இருக்கவில்லை. அதோடு, என்னுடைய தோற்றத்தையும் அது முதுமைப்படுத்திக் காட்டும் என்பதாலேயே அதைத் தவிர்க்கிறேன். தற்போது வெப் சீரிஸில் நான் நடித்து வருக்றேன். அதுவும் கூட எனக்கு பிடித்திருக்கிறது. அதனால், தொடர்ந்து வெப் சீரிஸில் நடிக்க காத்திருக்கிறேன் என்கிறார்.