18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி |
பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு தனது எழுபதாவது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடினார். தந்தையின் பிறந்தநாளுக்கு ஏதாவது வித்தியாசமான பரிசு தந்து அசத்த வேண்டும் என முடிவு செய்த அவரது மகளும், தயாரிப்பாளரும், நடிகையுமான லட்சுமி மஞ்சு, பிரமாண்டமான சிம்மாசனம் ஒன்றை வழங்கி அதில் அவரை அமரவைத்து அழகு பார்த்துள்ளார்.
தந்தையுடன் இந்த சிம்மாசனத்தில் குடும்பத்துடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட லட்சுமி மஞ்சு, அதை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு, “எனது தந்தைக்கு இன்று புதிய சிம்மாசனம் கிடைத்துள்ளது. இதில் எங்கள் மூவரையும் (சகோதரர்கள் விஷ்ணு, மனோஜ்) குறிப்பிடும் விதமாக மூன்று சிங்கங்கள் இடம் பெற்றுள்ளன..” என தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளார்.