Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் 99 பாடல்களை வெளியிட்ட ரஹ்மான்

20 மார், 2020 - 16:14 IST
எழுத்தின் அளவு:
AR-Rahman-released-99-songs

ஜியோ ஸ்டூடியோஸுடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் தயாரித்துள்ள 99 சாங்ஸ் படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. முழுவதும் மியூசிக்கல் டிராமா திரைப்படமாக உருவாகியிருக்கும் 99 சாங்ஸ் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தப் படத்தின் பாடல்கள் எப்போது ரிலீஸாகும் என, ஏக்கத்திலிருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக மார்ச் 20ல், இந்தப் படத்தின் பாடல்கள் ரிலீஸாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

‛‛இந்த கஷ்டமான காலத்தில் உங்களுக்கு 99 சாங்ஸ் படத்தின் பாடல்களை வெளியிடுவதில் மகிழ்ச்சி. இதில் 14 பாடல்கள் உள்ளன. கூட்டில் அடைபட்டிருக்கும் இசைப் பறவைகள், அந்தப் பாடல்களைப் பாடி வீடியோவை போஸ்ட் செய்யுங்கள் என கேட்டுக் கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

அறிமுக இயக்குநரான விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் ஏஹான் பட், எடில்சி வர்கஸ் ஆகிய இருவரும் அறிமுக நாயகன் - நாயகியாக இணைந்து நடித்திருக்கின்றனர். கடந்த ஆண்டில் நடந்த பூசன் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம், இந்த ஆண்டின் இறுதியில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

எந்த விஷயத்தையும் தொழிலோடு பொறுத்திப் பார்த்து அதை செய்வதில் சினிமாக்காரர்கள் கில்லாடி. அப்படித்தான், கொரோனா பாதிப்பில் இருந்து இசை மூலம் மீளலாம் என்பது போன்றதொரு கருத்தைச் சொல்லி இருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மக்கள் ஊரடங்கு - பிரதமரின் அழைப்பை வரவேற்ற கமல்மக்கள் ஊரடங்கு - பிரதமரின் அழைப்பை ... அமலா பால் 2வது திருமணம் உண்மையா? குழப்பத்தில் ரசிகர்கள் அமலா பால் 2வது திருமணம் உண்மையா? ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in