Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மலையாளப் படத்தில் நடிக்கிறார் குவாடன் பெய்ல்ஸ்

20 மார், 2020 - 13:49 IST
எழுத்தின் அளவு:
Quaden-bayles-acting-in-Malayalam-film

தலைப்பை படித்ததும் யார் இந்த குவாடன் பெய்ல்ஸ் என்று நினைக்கத் தோன்றும். ஆஸ்திரிலியாவை சேர்ந்த 9 வயது சிறுவன். சில வாரங்களுக்கு முன்பு, குள்ளமாக இருப்பதாகத் தன்னை எல்லோரும் கிண்டல் செய்வதால் தன்னைக் கொன்று விடுங்கள் என்று அவன் கதறி அழுத வீடியோ உலகின் மனசாட்சியை உலுக்கியது. அதன் மூலம் பிரபலம் ஆனவர் குவாடன் பெய்ல்ஸ். பொதுவிழாக்களில் கவுரவிக்கப்பட்டார். உதவிகள் குவிந்தது.

இந்நிலையில் மலையாள நடிகர் பக்ரு, தானும் சிறு வயதில் இதுபோன்ற கிண்டல்களை எதிர்கொண்டதாகவும், அன்று தான் அழுதது தான் பின்னாளில் தனது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் அளவு ஊக்கத்தைத் தந்தது என்று குவாடனுக்கு பதில் அளித்திருந்தார். பக்ரூவின் இந்த வார்த்தைகளால் ஊக்கம் பெற்றுள்ள குவாடன், பக்ரூவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

"குவாடனுக்கு நடிகனாக வேண்டும் என்று ஆசை. அதனால் பக்ரூவின் வார்த்தைகள் அவருக்கு ஊக்கத்தைத் தந்துள்ளது" என்று குவாடனின் தாய் யராகா பக்ருவிற்கு பதில் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து குவாடனை மலையாள படத்தில் நடிக்க வைக்க பக்ரு முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் குவாடனுக்கு அனுப்பி உள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: நீ நடிக்க விருப்பம் என்று சொல்லி இருந்தாய். ஜானகி என்கிற மலையாளத் திரைப்படத்தில் நடிக்க உனக்கு ஒரு அழகிய வாய்ப்பு தயாராக இருக்கிறது. இந்தப் படத்தின் கருவே உடலமைப்பை பார்த்து துன்புறுத்தல், நையாண்டி செய்தல் ஆகியவற்றுக்கு எதிரானது தான். கொரோனா பிரச்சினை தீர்ந்தவுடன் இந்தப் படத்தின் இயக்குநர் உன்னை நடிக்க அழைக்கவுள்ளார். இவ்வாறு அதில் பக்ரூ தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
இந்தியாவை சேர்ந்த ஹாலிவுட் நடிகைக்கு கொரோனா பாதிப்புஇந்தியாவை சேர்ந்த ஹாலிவுட் ... சுய ஊரடங்கு: விழிப்புணர்வு ஏற்படுத்துவார்களா தமிழ் நடிகர்கள்? சுய ஊரடங்கு: விழிப்புணர்வு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
20 மார், 2020 - 21:19 Report Abuse
Nallavan Nallavan இது போன்ற நிகழ்வுகளால் அந்தச் சிறுவனுக்கு தன்னம்பிக்கை வளரும் என்பதெல்லாம் தவறான நம்பிக்கை ..... ஒரு கட்டத்தில் இதை உணர்வான் அச்சிறுவன் ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in