ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
புதுடில்லி : கொரோனா பரவலை தடுக்க, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ள சுய ஊரடங்கு உத்தரவை பாலிவுட் சினிமா பிரபலங்கள் வரவேற்றுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து, பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் டிவி மற்றும் வானொலி வழியாக உரையாற்றினார். ‛‛கொரோனா வைரசுக்கு எதிராக உலகமே போராடுகிறது. இது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டிய அவசியத்தை நமக்கு உணர்த்தியுள்ளது. இந்தியா, மிகுந்த மன தைரியத்துடன் கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறது. இதை விரட்ட வரும் 22ம் தேதி நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு நடத்த பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அன்று காலை 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, வீட்டை விட்டு யாரும் வெளியே வராமல் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். இதை பாலிவுட் பிரபலங்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
அஜய் தேவ்கன் கூறுகையில், சக இந்தியர்கள் அனைவருக்கும் வணக்கம். கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் 22ம் தேதி அனைவரையும் வீட்டிலேயே இருக்கும்படி கேட்டு கொண்டுள்ளார். இதை அனைவரும் உறுதியோடும், கட்டுப்பாடோடும் செய்ய வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.
Fellow Indians, Namaskar 🙏 A short while ago, Our PM Saab, Modiji, requested all of us to show resolve & restraint in the face of COVID-19. Please also adhere to the Janta Curfew on 22nd March by staying home. Stay Safe 🙏@PMOIndia @narendramodi #JantaCurfew
— Ajay Devgn (@ajaydevgn) March 19, 2020
ஷில்பா ஷெட்டி கூறுகையில், மதிப்பிற்குரிய பிரதமர் மோடி, முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதை ஏற்று நாம் அனைவரும் சுய கட்டுப்பாட்டை ஒழுக்கத்துடன் கடைபிடிக்க வேண்டும். ஜெய்ஹிந்தி என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
A very important announcement made by respected @narendramodi ji with self isolation we must practice self discipline. #jantacurfew Be Positive and responsible Jai Hind 🙏 pic.twitter.com/VeQyZaGcBh
— SHILPA SHETTY KUNDRA (@TheShilpaShetty) March 19, 2020
ரித்தேஷ் தேஷ்முக் டுவிட்டரில், மார்ச் 22ம் தேதி காலை 9 மணி முதல் இரவு 7மணி வரை மக்களே சுய ஊரடங்கு செய்து கொள்ள வேண்டும். அனைவரும் வீட்டிலிருந்து வேலை செய்யலாம். 60வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வீட்டிலேயே இருக்கலாம் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனாவை எதிர்த்து போராட நாட்டுக்காக இதை அனைவரும் செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.
Hon. PM Shri @narendramodi ji announces 'janta curfew' on 22 March, from 7am to 9pm. He also appeals to all to work from home as much as possible & adopt social distancing. Senior citizens above 60 to stay at home for next 2 weeks. Let's do this as one nation. #IndiaFightsCorona https://t.co/GHp81lbYaS
— Riteish Deshmukh (@Riteishd) March 19, 2020
ஹேமமாலினி டுவிட்டரில், பிரதமர் மோடியின் உரை நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிக்க கூடியதாக இருந்தது. நாட்டின் மீதான அவரின் தன்னலமற்ற பக்தி மற்றும் கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அவர் மேற்கொள்ளும் திட்டங்களை பார்த்து வணங்குகிறேன். நாம் அனைவரும் ஒரு தேசமாக ஒன்றுபட்டு இந்த கொடிய நோயின் அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவோம் ஜெய்ஹிந்த் என கூறியுள்ளார்.
@narendramodi What an inspirational address to the nation by our Hon PM Modi ji🙏Pranam to his great vision, his selfless devotion to the nation & his plans for overcoming the dreaded Corona virus. Let us all unite as a nation & face this massive threat as one. Jai Hind! pic.twitter.com/JDr4Ar0I0V
— Hema Malini (@dreamgirlhema) March 19, 2020
மகேஷ் பட் டுவிட்டரில், சமூக தொலைவு, ஒதுங்கி இருப்போம். சுய ஊரடங்கு செய்து கொள்வோம் என கூறியுள்ளார்.
Janta Curfew: Social distancing. Staying apart to put things together . #Jantacurfew pic.twitter.com/qwfvH2to44
— Mahesh Bhatt (@MaheshNBhatt) March 19, 2020
ஷபானா ஆஷ்மி டுவிட்டரில், கொரோனா வைரஸ் தொடர்பாக பிரதமர் மோடியின் பேச்சு அருமையாக இருந்தது. மார்ச் 22 அன்று காலை 9 மணி முதல் இரவு 7மணி வரை சுய ஊரடங்கு செய்து கொள்வோம் என பிரதமர் கூறியிருப்பதை நாம் அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அதேப்போன்று இந்த சூழ்நிலையிலும் மக்களுக்கு சேவை செய்யும் நபர்களை கவுரவிக்கும் விதமாக கைதட்ட கேட்டு கொண்டதையும் வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.
@narendramodi its a very good speech on Corona Virus and his appeal for #JantaCurfew on Sunday 22nd March stay home from 7am is something all Indians should do. I applaud him for inspiring us to stand at 5 pm on Sun 22nd March to honour people who believe in service about self.
— Azmi Shabana (@AzmiShabana) March 19, 2020
ரோகித் ஷெட்டி டுவிட்டரில், மோடிக்கு நிகர் வேறு யாரும் இல்லை. நாம் அனைவரும் அவருக்கு ஆதரவாக இருப்போம். அவர் சொன்னதை பின்பற்றுவோம். சுய ஊரடங்கு செய்து கொள்வோம் என கூறியுள்ளார்.
No one is better than @narendramodi ji when it comes to Moral boosting.
— Rohit Shetty (@iaRohitShetty) March 19, 2020
Let's show our support and dedication to fight this pandemic.
Be thankful to the people running emergency services and reduce their burden by following the guidelines. #JantaCurfew #IndiaFightsCorona
🙏🙏🙏 pic.twitter.com/t4PyGOBvFY
அக்ஷய் குமார் டுவிட்டரில், பிரதமர் மோடியின் சிறந்த முயற்சி. மார்ச் 22ம் தேதி நாம் அனைவரும் சுய ஊரடங்கு செய்து, இந்த உலகத்துக்கு நாம் அனைவரும் இந்த விஷயத்தில் ஒற்றுமையாக இருப்போம் என எடுத்துரைப்போம் என கூறியுள்ளார்.
An excellent initiative by PM @narendramodi ji...this Sunday, March 22 from 7 am to 9 pm let's all join in the #JantaCurfew and show the world we are together in this. #SocialDistancing
— Akshay Kumar (@akshaykumar) March 19, 2020
வருண் தவான் டுவிட்டரில், மார்ச் 22ம் தேதி, சுய ஊரடங்கிலும், அன்று மாலை 5மணிக்கு நாட்டுக்காக சேவை செய்யும் ஹீரோக்களை கைதட்டி வரவேற்கும் விஷயத்திலும் நான் பங்கேற்பேன். சமூகத்தில் இருந்து விலகி இருப்போம். பிரதமர் மோடியின் அறிவுரைகளை பின் பற்றுவோம். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.
I will take part in the #jantacurfew on March 22 nd and at 5 in the evening will show my support to our selfless heroes fighting this virus. This is a time to be one and practise #SocialDistancing. Let's follow our prime ministers appeal. #BeSafe https://t.co/V9jAqfT7a2
— Varun Dhawan (@Varun_dvn) March 19, 2020