திருமணநாளில் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்திய எஸ்.ஏ.சந்திரசேகர் | வட இந்தியர்கள், தென்னிந்திய படங்களை விரும்பி பார்க்கிறார்கள்: சந்தீப் கிஷன் | 'விஜய் 67' காஷ்மீர் சென்ற த்ரிஷா, பிரியா ஆனந்த் | தெலுங்கில் நஷ்டத்திலிருந்து தப்பிக்கும் 'வாரிசு' | பாலிவுட்டில் புதிய சாதனை படைத்துள்ள ஷாரூக்கான் | தலைக்கூத்தல் மூலம் தமிழுக்கு வரும் பெங்காலி நடிகை | வறுமையில் வாடும் இயக்குனர் ‛குடிசை' ஜெயபாரதி | ஹாலிவுட் நடிகை புற்றுநோய்க்கு பலி | தமிழுக்கு ஹீரோவாக வரும் தெலுங்கு காமெடி நடிகர் | விமரிசையாக நடந்த பூர்ணாவின் வளைகாப்பு |
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாகத் தமிழகத்தில் இருக்கும் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டிருக்கின்றன. அதனால், புதிய திரைப்படங்களின் ரிலீசும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதனால், கடந்த சில வாரங்களில் ரிலீசான படங்களின் வசூல் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, நடிகர் ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்துக் கடந்த வாரம் ரிலீஸான தாராள பிரபு படத்தின் வசூல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
படம் வெளியான மூன்று நாட்களில் திரையிடம் நிறுத்தப்பட்டு விட்டது. இருந்த போதும், மார்ச் 31க்குப் பின், படம் மீண்டும் திரையிடப்படும் என்ற எதிர்பார்ப்பில், தாராள பிரபு படக் குழு இருக்கிறது. அப்போதும், ரசிகர்களின் ஆதரவு வேண்டும் என்பதற்காக, படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் பாதிப்பு, இன்று உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. இந்நிலையில், அனைவரும் பாதுகாப்புடன் இருக்கும் வகையில், நம் மாநிலம், நாடு மற்றும் உலக அளவில் அரசாங்க அமைப்புகள் எடுத்து வரும் முயற்சிகள் பெரிதும் பாராட்டுக்குரியவை. கடந்த வாரம் வெளியாகி, உங்களது பேராதரவைப் பெற்ற தாராள பிரபு படத்தின் திரையிடல், அரசு ஆணைகளுக்கு இணங்க, மார்ச் 31 வரை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
தாராள பிரபு படத்துக்கு, ஒவ்வொருவரும் அளித்துவந்த அன்புக்கும் ஆதரவுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி. ஒவ்வொருவரின் விமர்சனமும் எங்களுக்கு நெகிழ்ச்சியைத் தருகிறது. இந்த இக்கட்டான சூழலைக் கடந்ததன் பின், படம் மீண்டும் வெளியிடப்படும். அப்போதும், உங்களுடைய மேலான ஆதரவை எதிர்நோக்குகிறோம். அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள். கொரானாவில் இருந்து மீள்வோம் என்றார்.