சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
அஞ்சாதே படத்தின் மூலம் அறிமுகமானவர் அஜ்மல். அதன்பிறகு, ‛திரு திரு துறு துறு, கோ, கருப்பம்பட்டி, வெற்றிச்செல்வன், சித்திரம் பேசுதடி 2, இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் நடித்தார். அவர் நடித்து முடித்துள்ள நுங்கம்பாக்கம் இன்னும் வெளிவரவில்லை.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்து வரும் நெற்றிக்கண் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அஜ்மல். மிலிந்த் ராவ் என்ற புதுமுகம் இயக்குகிறார். பிளைண்ட் என்ற கொரியன் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் இது. ஹீரோயின் சப்ஜெக்ட் படம். இதில் அஜ்மல் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், என்றும் வில்லனாக நடிக்கிறார் என்றும் இருவித தகவல்கள் வெளியாகி உள்ளது.
"நெற்றிக்கண் படத்தில் ஆக்ஷன் நிறைந்த ஒரு கேரக்டரில் நடிக்கிறேன்" என்று மட்டும் அஜ்மல் கூறியிருக்கிறார். படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், கிரிஷ் இசை அமைக்கிறார். 80 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது.