Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் : டி.சிவா தலைமையில் புதிய அணி

19 மார், 2020 - 14:53 IST
எழுத்தின் அளவு:
Producer-Council-Election:-T.Siva-team-announced

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற ஜூன் மாதம் தேர்தல் நடக்கிறது. இதில் பல்வேறு அணிகள் போட்டியிடும் என்று தெரிகிறது. பாரதிராஜா தலைமையிலான அணி "தேர்தல் வேண்டாம், நிர்வாகிகளை போட்டியின்றி தேர்ந்தெடுப்போம்" என்று கூறிவரும் நிலையில் பல்வேறு அணிகள் உருவாகி வருகிறது. விஷால், சத்யஜோதி தியாகராஜன், தேனான்டாள் பிலிம்ஸ் முரளி ஆகியோர் தலைமையில் புதிய அணிகள் உருவாகும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் அம்மா கிரியேஷன் டி.சிவா தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி உருவாகி உள்ளது. இந்த அணியின் சார்பில் போட்டியிடுகிறவர்கள் அறிவிக்கப்பட்டார்கள்.

தலைவர் பதவிக்கு டி.சிவாவும், துணை தலைவர்கள் பதவிக்கு ஜி.தனஞ்செயன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோரும், செயலாளர்கள் பதவிக்கு பி.எல்.தேனப்பன், ஜே.சதீஷ் குமார் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு கே.முரளிதரனும் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டது. இது தவிர ராதாரவி, மனோபாலா, மனோஜ் குமார், கே.ராஜன், சித்ரா லட்சுமணன், உள்ளிட்ட 21 பேர் செயற்குழு உறுப்பினருக்கு போட்டியிடப்போவதாக தெரிவிக்கப்பட்டது.

டி.சிவா கூறியதாவது: தயாரிப்பாளர்களிடம் ஒற்றுமை இல்லாததால் சங்கம் இன்று இக்கட்டான சூழ்நிலையில் நிற்கிறது. அதனால் தான் சங்க பணிகளில் அனுபவம் வாய்ந்தர்கள் இணைந்து இந்த அணியை உருவாக்கி இருக்கிறோம். சங்கத்தில் உள்ளவர்கள் அரசியலில் இருக்கலாம். ஆனால் சங்கத்திற்குள் அரசியலை கொண்டு வரக்கூடாது. சினிமா தொழிலுக்கு அரசின் ஆதரவு வேண்டும். எனவே அரசோடு இணைந்து பணியாற்றுகிறவர்கள் வேண்டும். படம் எடுப்பவர்களுக்கு பாதுகாப்பு, படம் எடுக்காத தயாரிப்பாளர்களுக்கு நலன் இவற்றை கருத்தில் கொண்டு செயல்படுவோம். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா பாதித்தவர்களுக்கு உதவ ஹாலிவுட் நட்சத்திர ஜோடி 7 கோடி நிதிகொரோனா பாதித்தவர்களுக்கு உதவ ... ஒரே படத்தால் வீடு, கார் வாங்கி, கல்யாணம் பண்ணினேன்: பாண்டியராஜன் ஒரே படத்தால் வீடு, கார் வாங்கி, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in