175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படம் திரவுபதி. மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்தனர். ட்ரைலர் மற்றும் படத்தின் கதைக்களம் மூலமாகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், வசூல் ரீதியாகவும் கல்லா கட்டியது.
தற்போது கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், திரவுபதி படக் காட்சிகளும் நிறுத்தப்பட்டு விட்டன. இதையடுத்து, மோகன் ஜி, ட்விட்டரில், 'கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்றுடன் தமிழகம் முழுக்க திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. இதனால், திரவுபதி படக் காட்சிகள் முடிவுக்கு வந்தன. கிட்டத்தட்ட பதினெட்டு நாட்கள்; நூறு திரையரங்குகள்... திரவுபதி படத்தை மாபெரும் சரித்திர வெற்றி பெற வைத்த பெருமை உங்களையே சேரும். இதற்காக, ஒவ்வொருவரின் பாதம் தொட்டு நன்றி தெரிவிக்கிறேன். இனி, என்னுடைய அடுத்தப்பட வேலைகள் சந்தோஷமாக துவங்குகிறது. எல்லோருக்கும் நன்றி,' என பதிவிட்டார்.
அந்தப் பதிவுக்கு பதில் பதிவு போட்ட ரசிகர் ஒருவர், படத்தின் வசூல் பதினைந்து கோடி ரூபாய் இருக்குமா? நிகர லாபம் 7-8 கோடி ரூபாய் இருக்குமா? விநியோகஸ்தர்கள் யாரும் நஷ்டம் அடையவில்லையே? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் பதிவிட்டார் மோகன் ஜி, 'திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். யாரும் அவர்களுடைய பணத்தை இழக்கவில்லை. சராசரியாக, அனைவருக்கும் மூன்று மடங்கு லாபம் கிடைத்தது. திரவுபதி படம் ரியல் ப்ளாக் பஸ்டர். என்னுடைய அடுத்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி தான் கதாநாயகன். விரைவில், ஒரு நல்ல நாளில் படத்துக்கான தலைப்பு அறிவிக்கப்படும்,' என கூறியிருக்கிறார்.