இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார் | விஜய் மில்டன் படத்தில் ஷாம் | ‛விஜய் 67' பட தலைப்பு லோடிங் : நாளை வருகிறது அறிவிப்பு | இசை படைப்புகளுக்கு சேவை வரியை எதிர்த்த ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷின் மனுக்கள் தள்ளுபடி | 90 சதவீதம் குணமடைந்துவிட்டேன் : விஜய் ஆண்டனி | விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகரின் மகள் | விஜய் படத்திற்காக இளம் நடிகரை சிபாரிசு செய்தாரா மாளவிகா மோகனன் ? | நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? |
கடைசியாக 2015ல் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான றெக்க படத்தில் நடித்திருந்தார் லக்ஷ்மி மேனன். அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதன்பிறகு கவுதம் கார்த்திக் உடன் சிப்பாய் என்ற படத்திலும், பிரபுதேவா உடன் யங் மங் சங் படத்திலும் நடித்தார். இரண்டு படங்களும் முடங்கி கிடக்கிறது.
இந்நிலையில் மீண்டும் கவுதம் கார்த்திக் உடன் ஒரு படத்தில் நடிக்கிறார். இதனை முத்தையா இயக்குகிறார். ஏற்கனவே முத்தையாவின் கொம்பன், குட்டிப்புலி படங்களில் லட்சுமி மேனன் நடித்தவர். விரைவில் படத்திற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.
முத்தையா கூறுகையில், புதுவிதமான சென்டிமென்ட் உடன் புதிதாக ஒரு படத்தை இயக்க இருக்கிறேன். இதில், கவுதம் கார்த்திக், லக்ஷ்மி மேனன் இருவரும் நடிக்கவிருக்கின்றனர். லக்ஷ்மி மேனன், நீண்ட இடைவெளிக்குப் பின், தமிழில் நடிக்க வருகிறார். இருந்தாலும், அவர் இந்தப் படத்திலும் தன்னுடைய முத்திரையைப் பதிப்பார் என்றார்.