Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆப்பில் தனது படங்களை வெளியிடும் ஜெய் ஆகாஷ்

18 மார், 2020 - 10:52 IST
எழுத்தின் அளவு:
Jai-Akash-to-release-his-movie-in-own-App

இலங்கையில் பிறந்து லண்டனில் செட்டிலானவரான ஜெய் ஆகாஷ் ரோஜாவனம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ரோஜா கூட்டம், ராமச்சந்திரா, இனிது இனிது காதல் இனிது உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது தனது படங்களை தானே இயக்கி, தயாரித்து, நடித்து வருகிறார். தற்போது தான் இயக்கி நடித்து வரும் அடங்காத காளை படத்தை அவரே உருவாக்கி உள்ள புதிய ஆப்பில் வெளியிட இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தற்போது அடங்காத காளை படத்தை நடித்து, தயாரித்து இயக்கியுள்ளேன். இப்படத்தில் எனக்கு அப்பா மகன் என இரு வேடங்கள். நாயகிகளாக ஆர்த்தி சுரேஷ், கவிதா, குஷி ஆகியோர் நடித்துள்ளார்கள். அப்பா வேடத்திற்கு ஜோடியாக தொலைக்காட்சி நடிகை தேவி கிருபா நடிக்கிறார். யு.கே.முரளி இசை அமைத்துள்ளார். சக்ரி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வருகிறது. தெலுங்கில் அந்தால ராக்சஷடு எனும் தலைப்பில் வருகிறது. தற்போது இந்த படத்தை வெளியிட ஒரு புதிய ஆப் ஒன்றை வடிவமைத்துள்ளோம். இந்த ஆப் ரசிகர்கள் படம் பார்க்க மிகச்சிறந்த எளிய வழியாக இருக்கும். வருகிற 18ந்தேதி ஆப்பை வெளியிடுகிறோம்.

இந்த ஆப்பை அனைவரும் தங்கள் மொபைலில் இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம். இந்த ஆப்பில் முதல் படமாக அடங்காத காளை வெளியாகிறது. 50 ரூபாய் கட்டி இந்த ஆப்பில் இரண்டு நாட்கள் வரை பார்த்து கொள்ளலாம். நீங்கள் பார்த்த பிறகு அந்த இரண்டு நாட்களில் வேறு யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கண்டனம்!கண்டனம்! கோமல் சர்மாவை பாலிவுட்டுக்கு அனுப்பிய மரைக்காயர் கோமல் சர்மாவை பாலிவுட்டுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in