முதல்வர் வெளியிட்ட எம் ஜி ஆர் பாடல் | 18ஆம் வருடத்தில் ஒக்கடு ; மகேஷ்பாபு மனைவி மீது தயாரிப்பாளர் வருத்தம் | விரைவில் சுரேஷ்கோபியின் ஒத்தக்கொம்பன் ஆரம்பம் | சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் |
மலையாளத்தில் நடிகர் திலீப் நடித்து வரும் படங்களில் ஒன்று தான் 'புரொபசர் டிங்கன்'. மேஜிக் பின்னணியில் 3டியில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப்படம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டு வெவ்வேறு விதமான தடைகளை சந்தித்து, கிட்டத்தட்ட 70% வரை தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இந்த படத்தின் இயக்குனரான ராமச்சந்திர பாபு எதிர்பாராதவிதமாக காலமானார். இது படக்குழுவினருக்கு பேரிடியாக அமைந்தது. இன்னும் 30 சதவீதம் படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ராமச்சந்திர பாபுவின் தம்பியும் பிரபல ஒளிப்பதிவாளருமான ரவி கே சந்திரன் இந்தப்படத்தின் மீதி காட்சிகளை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.