கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
காதல் கோட்டை கட்டி தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மூன்றாவது மகள் நிரஞ்சனி. காஸ்டியூம் டிசைனர் இப்போது நிரஞ்சனியும் நடிகை ஆகிவிட்டார்.
சமீபத்தில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இரண்டாது நாயகியாக நடித்திருந்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நடிக்கும் ஆசை எனக்கு இருந்தே இல்லை. விருப்பப்பட்டுதான் காஸ்ட்யூம் டிசைன் செய்தேன். சிகரம் தொடு, கற்றது களவு, காவியத் தலைவன், பென்சில், கதகளி, கபாலி உள்பட பல படங்களில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றினேன்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்குள் காஸ்ட்யூம் டிசைனரகத்தான் வந்தேன். "திமிரா ஒரு பெண்ணு வேணும். அதுக்கு நீங்கதான் சரியான ஆள்" என்று இயக்குனர் கூறி என்னை நடிகை ஆக்கிவிட்டார். இப்போது நடிப்பின் மீது ஆர்வம் வந்து விட்டது. இனி நடிப்பில் தீவிரமாக கவனம் செலுத்துவேன். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் கொஞ்சம் கிளாமரான உடை அணிந்து நடித்தேன். இனியும் அப்படி நடிப்பேன் கதைக்கு தேவையாக இருந்தால். நடிப்பில் கவனம் செலுத்தினாலும் தொடர்ந்து காஸ்டியூம் டிசைனராகவும் பணியாற்றுவேன். என்றார்.