800 கோடி வசூலைக் கடந்த 'பதான்' | கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா | மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான் | பாபி சிம்ஹாவை புறக்கணித்த தமிழ் ஹீரோக்கள் | எனக்கு ஜாதி பிடிக்காது : மேனனை உதறித் தள்ளிய சம்யுக்தா | 92வது வருடத்தில் தெலுங்கு சினிமா | 3வது முறை கிராமி விருது வென்று அசத்திய இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் | போட்டியாக இருந்த சீரியலுக்கே ஹீரோவாக என்ட்ரி கொடுத்த சிபு சூரியன் | ராடானுடன் கைகோர்த்த எஸ்.ஏ.சந்திரசேகர்! விரைவில் சின்னத்திரை என்ட்ரி | கவர்ச்சிக்கு வயது தடை கிடையாது ? : இத்தனை வயதிலும் அசத்தும் ஸ்ரேயா |
கொலைகாரன் படத்திற்கு பிறகு தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. அடுத்து விஜய் மில்டன் இயக்கத்தில் ஒரு படம், பாலாஜி கே.குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார்.
இதற்கு இடையில் ஆள் படத்தில் ஜெட் லாக் என்ற விஷயத்தையும், மெட்ரோ படத்தில் சங்கிலி பறிப்பு என்கிற விஷயத்தை வைத்து படம் தந்த ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கியது.
இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக மீசைய முருக்கு படத்தில் அறிமுகமான ஆத்மிகா நடிக்கிறார். கந்தக்கோட்டை, வல்லக்கோட்டை, ராஜவம்சம் படங்களை தயாரித்த டி.டி.ராஜா தயாரிக்கிறார். ஜோகன் இசை அமைக்கிறார், என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்புகள் 3 கட்டமாக நடக்க இருக்கிறது.