விஜய் 68 : முதல் பாடலுக்கு நடனம் அமைக்கும் பிரபுதேவா | அஜர்பைஜான் கிளம்பிய அஜித் - த்ரிஷா : ஒரு வழியாக துவங்குகிறது ‛விடாமுயற்சி' | 32 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி - அமிதாப் கூட்டணி : வந்தாச்சு அறிவிப்பு | ரஜினி படத்தில் இணைந்தார் பஹத் பாசில் | ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா |
மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்புகள் கடந்த சில மாதமாக தீவிரமாக நடந்தது. ஐதராபாத், சென்னை மற்றும் தாய்லாந்தில் 3 கட்டமாக படப்பிடிப்புகள் நடந்தது. இதன் 4வது கட்ட படப்பிடிப்பு0 புனேயில் ஒரு மாதம் வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் படத்தில் பணியாற்றுகிறவர்களுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. அதில் திட்டமிட்ட படப்பிடிப்பு ரத்து செய்யப்படுகிறது. படப்பிடிப்பு நடக்கும் புதிய தேதி பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன் 2 பாகங்களாக வெளிவருகிறது. இதில் முதல் பாகத்துக்கான 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஆனால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அதிக காலம் தேவைப்படும் என்கிறார்கள். என்றாலும் அடுத்து ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பாகத்தை வெளியிட இலக்கு நிர்ணயித்து பணிகள் நடந்து வருகிறது.