Advertisement

சிறப்புச்செய்திகள்

புனித் பிறந்தநாளில் மரியாதை : படங்களின் வெளியீட்டை தள்ளிவைத்த திரையுலகம் | பாதியில் வெளியேறும் தனுஷ் பட ஒளிப்பதிவாளர்கள் : அதிர்ச்சி தரும் ஒற்றுமை | 22 ஆண்டுகளுக்கு பின் அஜித்துடன் இணையும் தபு | சினேகனை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட்டில் நுழையும் மற்றொரு பிரபலம் | அஜித்தின் விஸ்வாசம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது | நடிகர் விஜய்க்கு எதிரான எதிர்மறை கருத்துகளை நீக்கியது உயர்நீதிமன்றம் | விஷால் படம் தள்ளி வைப்பு | கார்த்தியின் புதிய படத்தை இயக்கும் பேச்சிலர் பட டைரக்டர் | நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்ட பூமிகா | சமந்தா - நாக சைதன்யா பிரிவு - முதன் முறையாக மனம் திறந்த நாகார்ஜுனா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் திருமணத்தில் ஏன் இவ்வளவு ஆர்வம் - அனுஷ்கா கோபம்

14 மார், 2020 - 18:47 IST
எழுத்தின் அளவு:
Why-people-eager-about-my-marriage-says-Anushka-shetty

மக்கள் ஏன் என்னுடைய திருமண விஷயத்தில், இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் எனப் புரியவில்லை என நடிகை அனுஷ்கா கோபமாக கூறியிருக்கிறார். அனுஷ்காவுக்கு திருமணம் என்று கூறி, நடிகர் ஆர்யா, பிரபாஸ் என பலரையும் அனுஷ்காவுடன் இணைத்து வைத்து பல செய்திகள் வெளியாகி விட்டன. ஆனாலும், ஒன்றும் நடந்தபாடில்லை.

இந்நிலையில், சைஸ் ஜீரோ படத்தின் இயக்குநர் பிரகாஷ் கோவேலமுடியுடன் அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் நடைபெறப் போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை வைத்துத்தான், சமீபத்தில் சைலன்ஸ் பட புரமோஷனுக்காக, நடிகை அனுஷ்கா அளித்த பேட்டியின் போது கேள்வி எழுப்பினர்.

அப்போது, நடிகை அனுஷ்கா கூறியதாவது: இதுவரை பல நடிகர்களுடன் எனக்கு திருமணம் என செய்தி பரப்பி விட்டனர். அவர்கள் சொன்ன ஆண்களில் சிலருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்து விட்டது. இருந்தும், என் விஷயத்தில் மட்டும் எல்லோரும் இன்னும் ஆர்வமாக இருந்து செய்தி பரப்புகின்றனர். மக்கள் ஏன், என்னுடைய திருமண விஷயத்தில் மட்டும் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என எனக்குப் புரியவில்லை. அது சரியான தருணத்தில் நடக்கும். நான் எதையும் மறைக்க மாட்டேன். எனக்கான மணமகனைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை, என் பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டேன். அவர்கள் யாரை பார்த்து திருமணம் செய்து கொள்ளச் சொல்கின்றனரோ, அவரை திருமணம் செய்து கொள்வேன் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி பற்றி பேசணும்னா ரூ.5 லட்சம் கொடுங்க - சரத்குமார்ரஜினி பற்றி பேசணும்னா ரூ.5 லட்சம் ... வெப் சீரிசில் பூர்ணா வெப் சீரிசில் பூர்ணா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
15 மார், 2020 - 11:12 Report Abuse
அசோக்ராஜ் மிக்சர் யாவாரிங்க அப்படித்தான் கேப்பாங்க. விடுங்க.
Rate this:
15 மார், 2020 - 08:23 Report Abuse
பிரபாஸ் சரிம்மா...நீங்க உங்க கோலம் போடுறத continune பண்ணுங்க....
Rate this:
15 மார், 2020 - 08:07 Report Abuse
chandran காலாகாலத்துல உனக்கும் கல்யாணம் செய்து பாக்கனும்கிற ஆசை எங்கலுக்கெல்லாம் இருக்காதா. வயசு ஏறிகிட்டே போகுது. அப்புறம் நல்ல வாழ்க்கை அமையாது. இன்னும் எத்தனை காலம் உன்னையே வச்சி நாங்க கஞ்சி ஊத்தறது.
Rate this:
Agni Kunju - Singapore,சிங்கப்பூர்
15 மார், 2020 - 07:02 Report Abuse
Agni Kunju தாயி நீ இந்தியாவுல பிறந்திருக்க இந்தியமக்களின் வருமானத்தின் வருவாய்ல வாழ்க்க ஓடுது..நம்ம கலாச்சாரப்படி மக்களிடம் இந்த மாதிரி எதிர்ப்பார்ப்புகள் இருக்கத்தான் செய்யும்... இந்த மாதிரி எல்லாம் மக்கள் கேக்க கூடாதுன்னா... நீ நடிக்க கூடாது.. அது முடியாதுன்னுன்னா இப்படி கேள்வி வர்ரத தடுக்க முடியாது தாயி
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
14 மார், 2020 - 19:10 Report Abuse
Vasudevan Srinivasan நியாயமான கோபம்தான் நடிகை என்றாலும் அவருக்கும் சொந்த விருப்பு வெறுப்புகள் இருக்கும் அதை ஏன் ஊடகங்கள் புரிந்துகொள்ளாமல் சொந்த விஷயங்களைப்பற்றி கேள்வி எழுப்புகின்றன..?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in