அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் |
இயக்குனரும், நடிகருமான பாக்யராஜின் மகன் சாந்தனு, ‛சக்கரகட்டி' படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். 2010ல், மகனை வைத்து சித்து பிளஸ் 2 படத்தை இயக்கி, அதில் சிறப்பு தோற்றத்திலும் நடித்தார் பாக்யராஜ். படம் தோல்வி அடைந்தது. இன்று வரைக்கும் ஒரு நிலையான இடத்துக்காக போராடிக் கொண்டிருக்கிறார் சாந்தனு.
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின் பாக்யராஜும், சாந்தனுவும் இணைந்து நடிக்கிறார்கள். அதுல்யா, சாந்தனு ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் தவிர யோகிபாபு, ஆனந்தராஜ், மனோபாலா, மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், மதுமிதா உள்பட பலர் நடிக்கிறார்கள். ரமேஷ் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். தரண் இசை அமைக்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.
லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், பர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். தொலைக்காட்சி தொடர்கள் இயக்கிய அனுபவத்துடன், மலையாளத்தில் லாவெண்டர், தமிழில் ஜாம்பவான் உள்ளிட்ட படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீஜர் இப்படத்தை இயக்குகிறார்.
படம் பற்றி ஸ்ரீஜர் கூறுகையில், பல்வேறு கலாட்டா கல்யாண படங்களை பார்த்திருந்த நமக்கு, ஒரு ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகவிருக்கிறது இப்படம். புதுமணத் தம்பதிகளின் முதல் இரவில் நடைபெறும் முக்கிய பாரம்பரிய நிகழ்வுகளையும், சாங்கித்யங்களையும் நகைச்சுவை மாறாமல் விரசம் இல்லாமல் சுவராஸ்யமாக காட்சிப்படுத்த இருக்கிறோம் என்றார்.