Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஹாலிவுட்' பக்கம் என்ன சத்தம்? - தி கான்ஜூரிங் 3

13 மார், 2020 - 13:06 IST
எழுத்தின் அளவு:
Conjuring-3-film-in-process

சாய்வு நாற்காலியில், 'அனபெல்' பொம்மை சாய்ந்தாடும் காட்சி நினைவிருக்கிறதா... அப்படியென்றால் நீங்கள், திகில் ரசிகர் தான். கடந்த, 2013ல் வெளியான, தி கான்ஜூரிங் படம், சூப்பர் ஹுரோக்களின் பின்னால் மட்டும் சென்ற ஹாலிவுட் திரையுலகை, திகில் பக்கம் மடைமாற்றியது. திடீரென காதை கிழிக்கும் சத்தம், பவுடர் அப்பிய பேய் முகம் என, பேஜாராக இல்லாமல், இயல்பாகவே திகிலுட்டியது தி கான்ஜூரிங்.

அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கும் வீட்டிற்கு செல்லும் எட் - லொரைய்ன் தம்பதி, பேயை எப்படி சமாளிக்கின்றனர் என்பது தான் கதைக்களம். மொத்தம், 20 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம், 320 மில்லியன் டாலர் வசூல் அள்ளியது. வேரா பார்மிகா, பாடரிக் வில்சன் நடிப்பில், ஜேம்ஸ் வான் இயக்கத்தில் வெளியான, தி கான்ஜூரிங் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, 2016ல் இரண்டாம் பாகம் வெளியானது. சொல்லியடித்ததை போல, வெற்றி பெற்றது.

இப்படங்களில் இடம்பெற்ற அனபெல் பொம்மை, பலருக்கு கிலியூட்டியதை அடுத்து, அனபெல் பெயரில் படம் வெளியானது. கன்னியாஸ்திரி போன்ற கதாபாத்திரத்தை மையப்படுத்தி, தி நன் படம் வெளியானது. எவ்வகையில் வெளியானாலும், திகிலிலும், வசூலிலும், இப்படங்கள் குறை வைக்கவில்லை. தற்போது, கான்ஜூரிங் தி டேவில் மேட் மீ டு இட் என்ற மூன்றாம் பாகம் வெளியாக உள்ளது.

கான்ஜூரிங் படத்தில் நடித்த கதாபாத்திரங்களே, இப்படத்திலும் இடம் பெற்றுள்ளன. வார்னர் புரோஸ் நிறுவனம், படத்தை வெளியிடுகிறது. மைக்கேல் சேவ்ஸ் இயக்கி உள்ளார். செப்., 11ல் படம் வெளியாகிறது. திக் திக் ரசிகர்களே தயாராக இருங்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
போட்றா வெடிய - கஸ்தூரி போட்ட குஷி டுவீட்போட்றா வெடிய - கஸ்தூரி போட்ட குஷி ... நான் பிளாப் ஹீரோயினா?: சமந்தா ஆதங்கம் நான் பிளாப் ஹீரோயினா?: சமந்தா ஆதங்கம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in