ரஜினியை சந்தித்த கமல், லோகேஷ் | பிபியை எகிறச் செய்யும் சிவானியின் பேரழகு | குமரிப்பெண், முதல் நீ முடிவும் நீ, காஞ்சனா 2 - ஞாயிறு திரைப்படங்கள் | சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சாக்ஷி அகர்வால் | ஸ்ருதி சண்முகப்ரியாவின் பேச்சுலர் பார்ட்டி புகைப்படங்கள் வைரல் | சித்ரா மாதிரி ஆகிடுமோனு பயமா இருக்கு : நக்ஷத்திரா பற்றி பகீர் கிளப்பும் ஸ்ரீநிதி விஜய் | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஷங்கர் பட நாயகி | மன்சூரலிகானிடம் ரூ. 50 லட்சம் மோசடி | சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் - அக்சய்குமார் லுக் வெளியானது | மே 30ல் ‛யானை' டிரைலர் |
கமல்ஹாசன் நடித்த மகாநதி படத்தில் நடித்தவர் ஷோபனா. கர்நாடக இசை பாடகியான இவர் அந்த படத்திற்கு பிறகு நடிக்கவில்லை. கர்நாடக இசை கச்சேரிகளில் பாடி வருகிறார். தனியாக இசை ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார். கடந்த 1995ம் ஆண்டு சிம்பொனி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து “கந்த சஷ்டி கவசம்” மற்றும் “டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்” ஆகிய இரண்டு ஆல்பங்களை பாடி உள்ளார். இந்த இரண்டு ஆல்பங்களும் சிம்பொனி மற்றும் பக்தி எப்.எம் என்ற பெயரில் 'யூ-டியூப்'பில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய பாடலை பயன்படுத்தி சிம்பொனி நிறுவனம் வருமானம் பெறுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஷோபனா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஷோபனாவில் கந்த சஷ்டி கவசம் மற்றும் டுவிங்கிள் டுவிங்கள் லிட்டில் ஸ்டார் ஆல்பங்களை வெளியிட சிம்பொனி நிறுவனத்திற்கு இடைக்கால தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.