வந்தாச்சு ‛விஜய் 67' அப்டேட் : ரசிகர்கள் குஷி, இந்தவாரம் முழுக்க கொண்டாட்டம் தான் | அதிரடியில் மிரட்டும் நானியின் "தசரா" டீசர் | தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‛ஜகமே தந்திரம்' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் தனுஷ். இந்தப்படத்தில் துப்பாக்கி வெடிப்பு சத்தங்களும், கொலைகளும் நிறைய இருக்கும் என்பதை படத்தின் மோஷன் போஸ்டர் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
மே மாதம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் புரமோஷனுக்கான வேலைகள் முழு வேகத்தில் நடக்கின்றன. இந்தப் படத்துக்கான புதிய போஸ்டர் ஒன்றை டுவிட்டர் மூலம் ரிலீஸ் செய்திருக்கும் தனுஷ், சுருளி சீக்கிரமாக வருகிறான் என பதிவிட்டிருக்கிறார். இதன் மூலம் இப்படத்தில் தான் சுருளி என்ற கேரக்டரில் நடித்திருக்கும் விஷயத்தை தனுஷ் வெளிப்படுத்தி இருப்பதாக படக் குழுவினர் தெவித்துள்ளனர்.
கார்த்திக் சுப்பராஜ் கூறுகையில், ஏற்கனவே ஜிகர்தண்டா படத்தில் டான் கேரக்டர் பிரதானமாக இருந்தது. அதை இண்டர்நேஷனல் லெவலுக்கான டானாக மாற்றினால் எப்படி இருக்குமோ, அப்படியொரு கேரக்டரில் தான் தனுஷ் நடித்திருக்கிறார். அதைத்தான், அவர் போஸ்டரை வெளியிட்டு சுருளி சீக்கிரமே வருகிறான் என குறிப்பிட்டிருக்கிறார். சுருளி கேரக்டரில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். சுருளி சீக்கிரம் வருவது மட்டுமல்ல; மிகப் பெரிய வெற்றியையும் பெற்றுத் தருவான் என்கிறார்.