ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
தமிழ்ப் படங்கள் பலவற்றிற்கு ஹிந்தியில் டப்பிங் மார்க்கெட்டும், டிஜிட்டல் மார்க்கெட்டும் பலமாகவே உள்ளது. சில படங்களின் உரிமைகள் சில பல கோடிகள் வரை செல்வதும் உண்டு.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா மற்றும் பலர் நடித்த 'இரும்புத்திரை' படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு 'தி ரிட்டர்ன் ஆப் அபிமன்யு' என்ற பெயரில் யு-டியூபில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.
ஓர் ஆண்டில் அந்தப் படத்தின் பார்வை எண்ணிக்கை 10 கோடியைக் கடந்துள்ளது. பொதுவாக ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரது படங்கள்தான் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யு-டியூபில் வெளியிடப்படும் போது 10 கோடி பார்வைகளைத் தாண்டும். இப்போது விஷால் நடித்துள்ள படமும் அந்த சாதனையைப் புரிந்துள்ளது.
தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கிலும் டப்பிங் ஆகி வெற்றி பெற்ற 'இரும்புத்திரை' படம் ஹிந்தி ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.