Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாணி போஜனால் பிரச்சினையில் சிக்கிய பூபாலன்: ஓ மை கடவுளே படக்குழு மீது போலீசில் புகார்

10 மார், 2020 - 14:50 IST
எழுத்தின் அளவு:
A-Real-estate-business-man-suffered-by-Oh-My-Kadavulae-Vaani-Bhojan

அசோக் செல்வன் நாயகனாக நடித்து கடந்த சில வாரங்களுக்கு முன் ரிலீசான படம் ஓ மை கடவுளே. இன்னமும் சில தியேட்டர்களில் படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படத்தில் ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் என இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்துடன் ரிலீசான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படக்குழுவுக்கு எதிர்பாராத விதமான பிரச்சினை ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது படத்தில் ஒரு காட்சியில் வாணி போஜன் தன்னுடைய தொலைபேசி எண் என ஒரு எண்ணை ஹீரோவிடம் தருவார்.

அந்த எண் உண்மையில் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் பிசினஸ்மேன் பூபாலன் என்பவருடையது. அந்த எண்ணை அவர் கடந்த 19 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறாராம். ஓ மை கடவுளே படத்தில் அந்த எண், நடிகை வாணி போஜனுடையது எனக் காட்சியில் வருவதால், அப்பட ரிலீசிற்கு பின்னர் தினமும் பூபாலனின் செல்போனிற்கு தொடர்ந்து அழைப்புகள் வருகிறதாம்.

அதில் பேசுபவர்கள், 'வாணி போஜன் இருக்கிறாரா?' எனக் கேட்டு பூபாலனை டார்ச்சர் செய்து வருகிறார்களாம். தினமும் காலை 5 மணிக்கு ஆரம்பித்து சமயங்களில் நள்ளிரவில் கூட இது போன்ற தொலைபேசி அழைப்புகள் வருவதால், மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறாராம் பூபாலன்.

19 ஆண்டுகளாக ஒரே எண்ணை பயன்படுத்தி வருவதால், அந்த எண்ணை மாற்றினால் தனது தொழில் பாதிக்கப்படும் என்பது பூபாலனின் எண்ணம். எனவே, தனது செல்போன் எண்ணை அனுமதியின்றி படத்தில் சட்டவிரோதமாக பயன்படுத்தியதற்காக ஓ மை கடவுளே படக்குழு மீது சென்னை போலீசில் புகார் அளித்துள்ளார் பூபாலன். அந்தப் புகாரில் அப்பட இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து மீது இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்த இடைக்கால தடைநடிகர் சங்கத்திற்கு மீண்டும் ... 10 கோடி பார்வைகளைக் கடந்த ஹிந்தி 'இரும்புத்திரை' 10 கோடி பார்வைகளைக் கடந்த ஹிந்தி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

meenakshisundaram - bangalore,இந்தியா
12 மார், 2020 - 05:34 Report Abuse
meenakshisundaram பேசாமே அவருக்கு மேனேஜர் வேலை பாக்கலாம் .காசு வரும்
Rate this:
10 மார், 2020 - 22:32 Report Abuse
Balamurugan B பைசா தேட நல்ல வழி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in