Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்த இடைக்கால தடை

10 மார், 2020 - 14:01 IST
எழுத்தின் அளவு:
Court-stay-on-Nadigar-Sangam-relection

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்த சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கியமான சங்கம் தென்னிந்திய நடிகர் சங்கம். கடந்தாண்டு ஜூன் 23ம் தேதி இந்த சங்கத்திற்கு தேர்தல் நடந்தது. பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், நாசர் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் எண்ண தடை விதிக்கப்பட்டிருந்தது. பல மாதங்களுக்கு பின்னர் கடந்த ஜன.,24ல் ஐகோர்ட் அளித்த தீர்ப்பில் நடிகர் சங்க தேர்தல் செல்லாது எனவும், மூன்று மாதத்திற்குள் புதிதாக தேர்தல் நடத்தவும், அதுவரை சங்கத்தின் நிர்வாகத்தை தனி அதிகாரியே நிர்வகிப்பார் எனவும் உத்தரவிட்டப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் விஷால் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று(மார்ச் 10) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, மறு தேர்தல் நடத்த இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. நடிகர் சங்கத்தை தனி அதிகாரி தொடர்ந்து நிர்வகிக்கலாம். விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 8க்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புதிதாக தொழில் துவங்கிய ஸ்ரத்தா ஸ்ரீநாத்புதிதாக தொழில் துவங்கிய ஸ்ரத்தா ... வாணி போஜனால் பிரச்சினையில் சிக்கிய பூபாலன்: ஓ மை கடவுளே படக்குழு மீது போலீசில் புகார் வாணி போஜனால் பிரச்சினையில் சிக்கிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ponniyin Selvan
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in