ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் 1947 | கன்னடத்தில் திரிஷ்யம் 2 : பி வாசு இயக்குகிறார் | அகோரியாக அதிரவைக்கும் பாலகிருஷ்ணா | ரிலீஸ் தேதியுடன் ஜூனியர் என்டிஆரின் புதுப்பட அறிவிப்பு | ராதே ஷ்யாம் புதிய போஸ்டர் வெளியீடு | கர்ணன் - தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி | கொரோனாவிலிந்து மீண்டுவிட்டோம் - மாதவன் | சாந்தி வாழ்க்கை படம் துவங்கியது | தனுஷிற்கு ஜோடியாகும் உப்பெனா நாயகி | கபடி பயிற்சியில் துருவ் விக்ரம் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த சினேகா, சக நடிகர் பிரசன்னாவை காதலித்து 2012ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2015ல் விஹான் என்ற ஆண் குழந்தை பிறந்தது. படங்களில் தொடர்ந்து நடித்து வந்த சினேகா மீண்டும் கர்ப்பமானதை அடுத்து, கடந்த மாதம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆத்யந்தா என பெயர் வைத்துள்ளனர். மகளை இதுவரை வெளி உலகுக்கு காண்பிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு சினேகா இன்ஸ்டாகிராமில் தனது மகளுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு மகளிர் தின வாழ்த்து சொல்லியிருக்கிறார். இருப்பினும் குழந்தையின் முகத்தை தெரியாத அளவுக்கு அந்த போட்டோவை பகிர்ந்துள்ளார் சினேகா.