விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' | 2 நாட்களில் ஐந்து மில்லியன் பார்வைகளை கடந்த திரிஷாவின் ‛தி ரோடு' டிரைலர்! | 'சந்திரமுகி 2' வெளியீடு தள்ளிப் போனது ஏன் ? | ஸ்கந்தா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! | ஹாலிவுட் பட வாய்ப்பு - அட்லீ! | 7ஜி பிருந்தாவன் காலனி படத்தின் ரீ - ரிலீஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்! | கோட் சூட் லுக்கில் அஜித்தின் புதிய போட்டோ வைரல்! |
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. தான் நடிக்கும் எந்த ஒரு திரைப்பட விழாக்களிலும் அவர் கலந்து கொள்வது கிடையாது. படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் போதே பட பிரமோஷன்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்று அவர் நிபந்தனை விதித்தபின்தான் அந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவாராம்.
இந்நிலையில் வருமான வரித் துறை சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் நயன்தாரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். அது திரையுலகில் ஆச்சர்யத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
தன்னுடைய படங்களின் விழாவுக்கு அப்படி நிபந்தனை விதிப்பவர், வருமான வரித் துறை நடத்தும் விழா என்பதால் பயந்து கொண்டு போய்விட்டாரோ என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
ஒரு படத்திற்கு நயன்தாரா 5 கோடி வரை சம்பளம் வாங்கும் நயன்தாரா திரைப்பட விழாக்களைப் புறக்கணித்து இந்த விழாவிற்கு வந்தது போல, இனி, திரைப்பட விழாக்களுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையும் பலமாக எழுந்துள்ளது.