விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' | 2 நாட்களில் ஐந்து மில்லியன் பார்வைகளை கடந்த திரிஷாவின் ‛தி ரோடு' டிரைலர்! | 'சந்திரமுகி 2' வெளியீடு தள்ளிப் போனது ஏன் ? | ஸ்கந்தா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! | ஹாலிவுட் பட வாய்ப்பு - அட்லீ! | 7ஜி பிருந்தாவன் காலனி படத்தின் ரீ - ரிலீஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்! | கோட் சூட் லுக்கில் அஜித்தின் புதிய போட்டோ வைரல்! |
எஸ்.எஸ். மியூசிக்கில் தொகுப்பாளினியாக இருந்தவர் பூஜா ராமச்சந்திரன். இவர், நண்பன், பீட்சா, நண்பேண்டா, காஞ்சனா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
இவர் தன்னுடன் பணியாற்றிய கிரேக் கல்லியாக் என்பவரை காதலித்து வந்தார். அவரை, 2010ல் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து நடித்தும் வந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வந்தவருக்கு, கிரேக் கல்லியாக்குடன் முரண்பாடு ஏற்பட்டது. ஏழாண்டுகளுக்குப் பின், 2017ல், கிரேக் கல்லியாக்கிடம் இருந்து விலகி, விவாகரத்து பெற்றார்.
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று புகழடைந்த பூஜா, கே.ஜி.எப்., படத்தில் நடித்த ஜான் என்பவரை காதலித்தார். அவரை 2017ல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவர் மற்ற நடிகைகளைப் போலவே பிகினி படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். தன்னுடைய கணவருடன் பிகினி உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் சேர்த்து வெளியிடுகிறார். அதிலும் படகு ஒன்றில் பிகினியில் செக்ஸியாக போஸ் கொடுத்து கிலுகிலுப்பூட்டி இருக்கிறார்.