Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காட்டுக்குள் ரஜினி.... எதிர்பார்ப்பை தூண்டும் புரொமோ பாடல், டீசர்...

09 மார், 2020 - 13:04 IST
எழுத்தின் அளவு:
Rajini-On-Discovery,-Promo-song,-teaser-out

டிஸ்கவரி சேனலில் பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. அடர்ந்த காட்டுக்குள் சிக்கிக் கொண்டாலும் உயிர் வாழ்ந்து தப்பிப்பது எப்படி என்பதை விளக்கும் அந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலும் பெரும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில், அவ்வப்போது சிறப்பு விருந்தினர்களாக சில பிரபலங்களும் பங்கு பெறுவது வழக்கம்.

ஏற்கனவே முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இது ரசிர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், நடிகர் ரஜினியும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள வனப் பிரதேசங்களில் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் 23ல், இரவு 8:00 மணிக்கு டிஸ்கவரி சானலில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




இந்நிலையில், ரஜினி பங்கேற்கும் அத்தியாயம் குறித்த புரோமோ பாடல், டீசர்களை டிஸ்கவரி சேனல் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன்படி ஹிந்தியில் ஷாரூக் நடிப்பில் வெளியான ‛சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் இடம் பெற்ற ‛லூங்கி டான்ஸ்... பாடல் பாணியில் ஒரு பாடலை வெளியிட்டுள்ளனர். தமிழ், ஆங்கிலம் கலந்து உருவாக்கப்பட்டுள்ள இப்பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.




அதேப்போன்று இன்று(மார்ச் 9) புதிதாக ஒரு புரொமோ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரஜினி, ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டுவது, கயிறை பிடித்து மலை மீது ஏறுவது, ஆற்றில் மார்பளவு தண்ணீரில் இறங்கி நடப்பது உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன. இந்த த்ரில் அனுபவத்தை ரஜினி மிகவும் மகிழ்ச்சி உடன் செய்துள்ளார். அவரின் வழக்கமான கண்ணாடி அணியும் ஸ்டைல் போன்றவையும் இடம் பெற்றுள்ளன.




இதுப்பற்றி பியர் கிரில்ஸ் டுவிட்டரில், ‛‛ரஜினியின் இடைவிடாத நேர்மறை, விட்டுக்கொடுக்காத உத்வேகம், அவர் மீது வீசப்படும் ஒவ்வொரு சவாலையும் அவர் எதிர்கொண்ட விதம் காட்டில் தெரிந்தது என பதிவிட்டுள்ளார்.





Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கதை திருடினாரா இயக்குநர் ஷங்கர்; ராதாரவி பேச்சுகதை திருடினாரா இயக்குநர் ஷங்கர்; ... இயக்குனர் - தயாரிப்பாளரான நடிகை காவேரி இயக்குனர் - தயாரிப்பாளரான நடிகை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

raji - CHENNAI,இந்தியா
11 மார், 2020 - 10:14 Report Abuse
raji சூப்பர். மகிழ்ச்சி
Rate this:
R.BHAGYARAJ - coimbatore,இந்தியா
10 மார், 2020 - 09:40 Report Abuse
R.BHAGYARAJ தலைவா .... சூப்பர்
Rate this:
kasi -  ( Posted via: Dinamalar Android App )
09 மார், 2020 - 22:35 Report Abuse
kasi Thalaiva .. you are real inspiration..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in