Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நட்டி நடராஜைக் கண்டு பயந்த சிபிராஜ்

08 மார், 2020 - 15:22 IST
எழுத்தின் அளவு:
Sibiraj-fear-about-Natty-Natraj

சிபிராஜ், ஸ்ருதி திலக், சமுத்திரகனி, நட்டி நடராஜ் உள்பட பலர் நடித்துள்ள படம் வால்டர். அன்பு இயக்கியுள்ள இந்த படம் வருகிற 13-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது.

அப்போது சிபிராஜ் பேசுகையில், இந்த வால்டர் படம் குழந்தை கடத்தல் சம்பந்தப்பட்ட ஒரு சமூக விழிப்புணர்வு கதையில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள போலீஸ் வேடத்திற்காக வெயிட் குறைத்து முழுமையாக என்னை தயார்படுத்தி நடித்துள்ளேன். அதனால் இந்த படத்தில் ஒரு மாறுபட்ட சிபிராஜை பார்க்கலாம்.

அதோடு, இந்த படத்தில் நான் மட்டுமின்றி சமுத்திரகனி, நட்டி நடராஜ் ஆகியோரும் முக்கிய தூண்களாக இருக்கிறார்கள். சமுத்திரகனி ஒரு கீ ரோலில் நடிக்க, நட்டி நடராஜ் அதிரடியான நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். அவர் இந்த படத்திற்குள் வந்த பிறகு என்னையும் அறியாமல் ஒரு பயம் ஏற்பட்டது. எனது தந்தை சத்யராஜ், வடிவேலுவுடன் இணைந்து நடிக்கும்போது எனக்குள் ஒரு சந்தோசம் கலந்த பயம் ஏற்படும். அவர்களுடன் எப்படி ஸ்கோர் பண்ண போகிறோமே என்று பயந்து பயந்து நடிப்பேன். அதேபோல்தான் நட்டி நடராஜ் இந்த படத்திற்குள் வந்தபோதும் ஒரு சந்தோசம் கலந்த பயம் எனக்கு ஏற்பட்டது. அந்த வகையில், சமுத்திரகனியும், நட்டி நடராஜூம் வந்த பிறகு மீடியம் பட்ஜெட் படமான வால்டர் மெகா பட்ஜெட் படமாகி விட்டது என்றார் சிபிராஜ்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
போலி ஆசாமியை போலீசிடம் பிடித்துக்கொடுத்த விஜய் தேவரகொண்டாபோலி ஆசாமியை போலீசிடம் ... வீரப்பெண்மணிகளுக்கு கமலின் மகளிர் தின வாழ்த்து வீரப்பெண்மணிகளுக்கு கமலின் மகளிர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bhaskaran - Chennai,இந்தியா
09 மார், 2020 - 16:42 Report Abuse
Bhaskaran வில்லனாக நடிக்கலாம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in