பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா | கேஜிஎப் 2 - அதிக விலை கேட்கும் தயாரிப்பாளர்கள் | மீண்டும் அருண் விஜய்க்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர் |
தெலுங்கு சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களின் விஜய் தேவரகொண்டா குறிப்பிடத்தக்கவர். இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில், அதை பயன்படுத்தி தெலுங்கானாவில் ஒரு இளைஞர் விஜய் தேவரகொண்டா பெயரில் போலி முகநூல் பக்கம் தொடங்கி அதன்மூலம் பெண்களிடம் ஆபாச சாட்டிங் செய்து வந்திருக்கிறார்.
இந்த தகவலை நண்பர் ஒருவர் மூலம் தெரிந்து அதிர்ச்சியடைந்த விஜய் தேவரகொண்டா, அதையடுத்து தனது நண்பரை வைத்து ஹேமா என்ற பெண்ணின் பெயரில் அந்த தெலுங்கானா இளைஞருடன் சாட்டிங் செய்து அதை சைபர் கிரைம் போலீசிடம் ஒப்படைத்துள்ளனர்.
அவர் கொடுத்த அந்த ஆதாரத்தை வைத்து, போலீசாரும் ஒரு பெண் மூலம் அந்த இளைஞருடன் சாட்டிங் செய்ய வைத்து அவரை ஐதராபாத்திற்கு வரவைத்து கையும் களவுமாக பிடித்துள்ளனர். அந்த இளைஞரிடம் விஜய் தேவரகொண்டாவின் பெயரை பயன்படுத்தி வேறு ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறாரா? என்பது குறித்த விசாரணைகளும் நடத்தப்பட்டு வருகிறது.