Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அனுஷ்காவுக்கு வந்த அதே பிரச்சினை கங்கனாவுக்கும்!

08 மார், 2020 - 12:21 IST
எழுத்தின் அளவு:
Kangana-face-the-same-problem-what-anushka-face?

ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். பார்ப்பதற்கு ஜெயலலிதா போலவே இருக்க வேண்டும் என்பதற்காக, இந்தப் படத்திற்காக சுமார் 20 கிலோ வரை தனது உடல் எடையை கூட்டினார்.

தலைவி படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு மட்டுமே மீதம் உள்ளது. இதையடுத்து அவர் புதிய படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். அடுத்ததாக அவர் தக்கட் மற்றும் தேஜாஸ் அகிய படங்களில் நடிக்க உள்ளார். தக்கட் படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்க உள்ளது. எனவே இந்த இரண்டு மாதங்களுக்குள் அவர் ஏற்றிய 20 கிலோ எடை குறைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கங்கனா. இதற்காக தினமும் ஜிம்மில் கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார் அவர். இது தொடர்பான வீடியோவை கங்கனாவின் குழுவினர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.

இதற்கு முன்னர், இஞ்சி இடுப்பழகி படத்திற்காக கூடிய எடையைக் குறைக்க முடியாமல் தான் அனுஷ்கா மிகவும் கஷ்டப்பட்டார். தன் உடல் பருமனால் பல பட வாய்ப்புகளையும் அவர் இழந்தார். பாகுபலி இரண்டாம் பாகத்தில் கூட அனுஷ்காவை ஒல்லியாகக் காட்ட ராஜமௌலி கிராபிக்ஸ் மூலம் மெனக்கெட்டார். தற்போது தான் போராடி தன் உடல் எடையை ஓரளவுக் குறைத்துள்ளார் அனுஷ்கா.

தனக்கிற்கும் அனுஷ்கா போன்ற நிலைமை வந்து விடக்கூடாது என நினைத்து தான் கங்கனா இப்படி உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் போலும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சமூக ஊடகங்களில் இணைய விரும்பவில்லை: அஜித் விளக்கம்சமூக ஊடகங்களில் இணைய விரும்பவில்லை: ... தனுஷ் - செல்வராகவன் இணையும் புதுப்பேட்டை 2 தனுஷ் - செல்வராகவன் இணையும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

PANDA PANDI - Aththipatti,இந்தியா
11 மார், 2020 - 01:56 Report Abuse
PANDA PANDI கவலை வேண்டாம். ஒரு SEAT உறுதி. I am waiting.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in