Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமூக ஊடகங்களில் இணைய விரும்பவில்லை: அஜித் விளக்கம்

07 மார், 2020 - 15:55 IST
எழுத்தின் அளவு:
Actor-AjithKumar-Clarified-about-social-media-account

நடிகர் அஜித் பெயரில் அவரின் கையெழுத்துடன் மார்ச் 6ம் தேதி வெளியான அறிக்கையில், சமூக வலைதளங்களில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது, எனக் குறிப்பிட்டிருந்தது. இதற்கு அஜித் சார்பில் அவரது சட்ட ஆலோசகர்கள் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


அந்த அறிக்கை: நடிகர் அஜித்குமார் அவர்களின் சட்ட ஆலோசகர்கள் நாங்கள் (இனிமேல் அவர் எங்கள் கட்சிக்காரராக கருதப்படுகிறார்). மேலும் இந்த நோட்டீஸை அவரது அறிவுறுத்தலின் பேரிலும் மற்றும் அவரது சார்பாகவும் நாங்கள் வெளியிடுகிறோம்.


மார்ச் 6, 2020 தேதியில் அஜித்குமார் வெளியிட்டதாக கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவது அவரது கவனத்திற்கு வந்துள்ளது. அதில் சமூக ஊடகங்களில் மீண்டும் சேர முடிவு செய்துள்ளதாகவும், அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளது போல் உள்ளது. அந்தக் கடிதம் அஜித்குமார் அவர்களின் பெயருடன் ஒரு போலியான தலைப்பில் அச்சிடப்பட்டு மேலும் அவரது போலி கையொப்பத்தையும் இணைத்திருப்பதைப் பார்க்கும் போது அதிர்ச்சியளிக்கிறது.


அந்த கடிதம் அஜித்குமார் அவர்களால் வெளியிடப்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்த கருத்துக்கள் யாவும் மறுக்கப்படுகின்றன என்றும் திட்டவட்டமாக தெரிவித்த அவர் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறார்.


அஜித்குமார் கடந்த காலத்தில் ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு எந்தவொரு சமூக ஊடகக் கணக்குகளும் இல்லை என்றும், சமூக ஊடகங்களின் எந்தவொரு அதிகாரப்பூர்வ ரசிகர் பக்கத்தையும் கொண்டிருக்கவில்லை அல்லது ஆதரிக்கவில்லை என்றும் பலமுறை தெரிவித்துள்ளார்.


அஜித்குமார் கீழ்கண்டவற்றை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறார்.


1) அவருக்கு அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் எதுவும் இல்லை.


2) அவர் எந்த சமூக ஊடகங்களிலும் இணைய விரும்பவில்லை.


3) சமூக ஊடகங்களின் எந்தவொரு கருத்தையும் மற்றும் எந்தவொரு ரசிகர் பக்கத்தையும் குழுவையும் அவர் ஆதரிக்கவில்லை.


4) மீண்டும் சமூக ஊடகங்களில் சேரப்போவதாகக் கூறி வந்த இந்த போலி கடிதத்தை அவர் வெளியிடவில்லை.


இறுதியாக, தவறான அறிவிப்பை வெளியிட்ட மற்றும் எங்கள் கட்சிக்காரரின் கையொப்பத்தை மோசடி செய்த குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்குத் தேவையான மற்றும் பொருத்தமான சட்ட நடவடிக்கைகள் முடிந்தவரை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட விரும்புகிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷ் ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் செல்வராகவன்!தனுஷ் ரசிகர்களின் கோரிக்கையை ... அனுஷ்காவுக்கு வந்த அதே பிரச்சினை கங்கனாவுக்கும்! அனுஷ்காவுக்கு வந்த அதே பிரச்சினை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

ramesh babu - chennai,இந்தியா
09 மார், 2020 - 17:43 Report Abuse
ramesh babu பாவம் அந்த மனுசன் :(
Rate this:
s vinayak - chennai,இந்தியா
08 மார், 2020 - 09:35 Report Abuse
s vinayak அஜித் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: எல்லா விஷயத்திலும் சிந்தித்து தீர்க்கமான முடிவை எடுத்து அறிவித்துவிடுங்கள். 20 அல்லது 30 வருடம் கழித்து செய்யப்போவதை இப்போதே நினைத்து குழம்ப வேண்டாம். ஏற்கனவே ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்று இன்னும் முடிவெடுக்கத் தெரியாமல் 70 வயதில் ஒருவர் அல்லாடிக்கொண்டிருக்கிறார். ஆரம்ப காலத்திலிருந்து அவர் ரசிகனான நான் இப்போது அரசு சேவையிலிருந்து ஓய்வும் பெற்று ஓய்வூதியமும் வாங்க ஆரம்பித்து விட்டேன். அப்படியென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நிறைய உழைத்து சம்பாதித்து குடும்பத்துடன் நிம்மதியாக வாழ வாழ்த்துகிறேன்.
Rate this:
shoba -  ( Posted via: Dinamalar Android App )
08 மார், 2020 - 08:12 Report Abuse
shoba whole world knows that ajith is a gutless fellow
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in