Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழில் மீண்டும் லாவண்யா திரிபாதி

06 மார், 2020 - 19:20 IST
எழுத்தின் அளவு:
Lavanya-Tiripathi-backs-to-tamil-cinema

அந்தாள ராக்சஷி தெலுங்கு படத்தின் மூலம் புகழ்பெற்றவர் லாவண்யா திரிபாதி. தற்போதும் தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் தற்போது ஏ1 என்ற தெலுங்கு படத்தில் ஹாக்கி வீராங்கனையாக நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

ஆனால் லாவண்யா திரிபாதியால் தமிழில் பெரிதாக சாதிக்க முடியவில்லை. அவர் அறிமுமான பிரம்மன் படம் பெரிதாக போகவில்லை. அதன் பிறகு நடித்த மாயவன் படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்த நிலையில் 3 வருட இடைவெளிக்கு பிறகு தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்குகிறார். அதர்வா முரளி ஹீரோ. இதில் 100 படத்திற்கு பிறகு அதர்வா மீண்டும் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார். அவரது ஜோடியாக லாவண்யா திரிபாதி நடிக்கிறார்.

"வழக்கமாக ஹீரோவை காதலித்து, டூயட் பாடுகிற கேரக்டர் இல்லை லாவண்யாவுக்கு, அழகானவராகவும் இருக்க வேண்டும், வலிமையானவராகவும் இருக்க வேண்டும் என்ற நாங்கள் தேடியதில் அமைந்தவர்தான் லாவண்யா. ஹீரோ மட்டுமல்ல ஹீரோயினும் வில்லனை எதிர்த்து நிற்க வேண்டும். அப்படியான கதை இது. அதற்கு பொருத்தமானவராக லாவண்யா இருப்பார்" என்கிறார் இயக்குனர் ரவீந்திர மாதவா. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நயன்தாரா, த்ரிஷா வழியில் பிந்து மாதவிநயன்தாரா, த்ரிஷா வழியில் பிந்து ... 5 மொழிகளில் தயாராகும் அஹம் பிரம்மாஸ்மி 5 மொழிகளில் தயாராகும் அஹம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in