‛பொன்னியின் செல்வன்' பார்க்க மாட்டேன்: திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி | வெகுமதியாய் கொடுத்த ரூபாயை பிரேம் போட்டு வச்சுருக்கேன்: 'ருக்மணி' பாபு | தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி படம்! | ரீ என்ட்ரி குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்த மீரா ஜாஸ்மின்! | ஆர்யா - ஹிப் ஹாப் ஆதி படங்களின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? | எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியுடன் வெளியான பொம்மை டிரைலர்! | டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற சூர்யா - ஜோதிகா! | தருமை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ரஜினிகாந்தின் இளைய மகள் | லியோ படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | விக்ரம் பிரபு புதிய படத்தின் ரிலீஸ் தேதி இதோ! |
பொக்கிஷம், வெப்பம் படங்களில் நடித்த பிந்து மாதவி, கழுகு படத்தின் மூலம் புகழ்பெற்றார். சில்க் ஸ்மிதாவின் சாயல் இருப்பதால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். தமிழில் 20 படங்கள் வரை நடித்திருந்தாலும், கேடி பில்லை கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், பசங்க 2, ஜாக்சன் துரை போன்ற படங்கள் தான் அவரை ஓரளவுக்கு அடையாளம் காட்டியது.
தற்போது அவர் நயன்தாரா, த்ரிஷா வழியில் தனி நாயகியாக நடிக்கிறார். யாருக்கும் அஞ்சேல் என்ற தலைப்பிடப்பட்ட இந்தப் படத்தை புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை இயக்கி ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தேவராஜுலு மார்க்கண்டேயன் தயாரிக்கிறார்.
அடர்ந்த காட்டுக்குள் நடக்கிற ஆக்ஷன் த்ரில்லர் கதை. 30 நாட்கள் அடர்ந்த காட்டுக்குள் தங்கி ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து திரும்பி இருக்கிறார்கள். "இது எந்த வகையான படம் என்பதை கணிக்க முடியாது. முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை தரும் படமாக இருக்கும், அடர்ந்த காடு, அதற்கள் மாட்டிக் கொள்ளும் ஹீரோயின் என்கிற வழக்கமாக படமாக இல்லாமல் புதிதாக இருக்கும்" என்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி.