லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் | தமிழ் ஹீரோ துன்புறுத்தினாரா...? - அப்படி சொல்லவே இல்லை என்கிறார் நித்யா மேனன் | பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா? | மீண்டும் ராஷ்மிகா உடன் இணையும் விஜய் தேவரகொண்டா | பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன் | ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது | 5 மொழிகளில் தயாராகும் 'பர்மா' | இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் |
அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்திய திரைப்பட தணிக்கைக் குழுவில் இருக்கக்கூடாது என ஜிப்ஸி பட இயக்குநர் ராஜு முருகன் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஜோக்கர் படத்தை அடுத்து ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜிப்ஸி. ஜீவா நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடாஷா சிங் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து தணிக்கைக்குச் சென்றது. அப்போது, ஐம்பதுக்கும் மேற்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டு, படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், படம் இன்று ரிலீஸாகி உள்ளது.
ராஜு முருகன் கூறுகையில், டில்லியில் நடக்கக்கூடிய வன்முறைகள், ஜிப்ஸி படம் வெளியாகும் நேரத்தோடு ஒத்துப் போகிறது. மதம் என்பது அவரவர் விருப்பம். மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களைத் தான் படத்தில் தோலுரித்துக் காட்டி இருக்கிறோம். சென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகளை யு டியூபில் வெளியிட்டது குற்றமா என எனக்குத் தெரியாது. சென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகளையும் சேர்த்து, முழு நீளத் திரைப்படத்தை டிஜிட்டலில் வெளியிடுவோம்.
இந்திய திரைப்பட தணிக்கைக் குழுவில், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் இருப்பதாலேயே, நல்ல படம் எடுப்பவர்களுக்கு பிரச்னை ஏற்படுகிறது. இதனால், தணிக்கைக் குழுவில் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் கட்டாயம் உறுப்பினர்களாக இருக்கக் கூடாது. இது மத்திய அரசுக்கு என்னுடைய தாழ்மையான கோரிக்கை.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.