Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

15 ஆண்டுகளாக தடுமாறாத தமன்னா

05 மார், 2020 - 13:29 IST
எழுத்தின் அளவு:
15-years-of-Tamanna

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தமன்னா. 2005ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த 'சந்த் சா ரோஷன் செஹ்ரா' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அவர் திரையுலகத்திற்கு வந்து நேற்றுடன் 15 ஆண்டுகள் ஆகிறது.

2005ம் ஆண்டின் கடைசியில் வெளிவந்த தெலுங்குப் படமான 'ஸ்ரீ' படம் மூலம் தென்னிந்தியத் திரையுலகத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 2006ல் வெளிவந்த 'கேடி' படம் மூலம்தான் தமிழில் அறிமுகம். ஆனாலும், 2007ல் வெளிவந்த 'கல்லூரி' படம் அவரை அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு போய் சேர்த்தது.

தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். 'பாகுபலி' படத்தின் முதல் பாகத்தில் அவருடைய நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தற்போது இரண்டு தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்து அடுத்து தெலுங்கில் வெளிவர உள்ள படம் 'தட் இஸ் மகாலட்சுமி'

நயன்தாரா, த்ரிஷா, காஜல் அகர்வால், ஹன்சிகா என பல போட்டிகள் இருந்தாலும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அவருக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறார் தமன்னா. 15 ஆண்டுகளாக தொடர்ந்து அப்படியே இருப்பது ஒரு சாதனைதான்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஆர்ஆர்ஆர் - இசையமைப்பாளருக்கு இவ்வளவு சம்பளமா ?ஆர்ஆர்ஆர் - இசையமைப்பாளருக்கு ... பா.ஜ.,வில் இணைகிறாரா கார்த்திக்? பா.ஜ.,வில் இணைகிறாரா கார்த்திக்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Chandrasekar Ganesh - coimbatore,இந்தியா
05 மார், 2020 - 20:55 Report Abuse
Chandrasekar Ganesh "தடுமாறாத" எதை குறிப்பிடுகிறீர்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in