Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெண் வேடத்தில் எம்.ஜி.ஆரின் அபூர்வ காட்சி - திடீர் வைரலாகும் வீடியோ

04 மார், 2020 - 11:29 IST
எழுத்தின் அளவு:
MGR-acted-as-woman-video-goes-viral

ஆரம்ப காலங்களில் எம்.ஜி.ஆரை மட்டுமே நாயகனாக வைத்து, தனது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான "தேவர் பிலிம்ஸ்" சார்பாக, 16 படங்களை தயாரித்து, வெற்றிப்பட தயாரிப்பாளராக வலம் வந்தவர் சாண்டோ எம்எம்ஏ சின்னப்ப தேவர். இந்த இருவரின் கூட்டணியில் 15வது திரைப்படமாக 21.10.1968 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம்தான் "காதல் வாகனம்".

பொதுவாக எம்.ஜி.ஆர் அவரது திரைப்படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் தோன்றி நடித்திருந்தாலும், அத்தனைப் படங்களிலும் கதாபாத்திரத்தின் தன்மை ஒரே மாதிரியாக இருப்பதை தமிழ் திரைப்பட ரசிகர்கள் ஒவ்வொருவரும் அறிந்த ஒன்று. புரட்சியாளனாக, மருத்துவராக, காவல்துறை அதிகாரியாக, தொழிலாளியாக, படகோட்டியாக, ஏழைப்பங்காளனாக இப்படி எந்த ஒரு கதாபாத்திரமானாலும் மது, மாது, புகை எனும் தீய பழக்கவழக்கங்களை அறவே வெறுக்கும் கதாபாத்திரமாகவும், ஈகை, அன்பு, பாசம், வீரம், குறிப்பாக தாயை தெய்வமாக போற்றி பெண்ணினத்தை கண்ணியப்படுத்தும் கதாபாத்திரமாக இருப்பதில் மிக கவனமாக இருந்தவர் எம்ஜிஆர். அவரது கடைசிப்படமான "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" வரை இதை சரியாக கடைபிடித்து வந்தார்.

இப்படிப்பட்ட ஆளுமை கொண்ட ஒரு யுகபுருஷரான எம்ஜிஆர், மேலை நாட்டு நவநாகரீக நங்கையாக குட்டைப் பாவாடை சகிதமாக நடிகர் அசோகனிடம் இருந்து ஜெயலலிதாவை மீட்பது போன்ற ஒரு பாடல் காட்சியில் தோன்றி நடித்திருக்கின்றார் என்றால் அது தேவர் பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்ட "காதல் வாகனம்" என்ற ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் தான்.

இது எம் ஜி ஆரின் திரைப்படங்களில் அரிதான ஒரு காட்சியாக பார்க்கக் கூடிய ஒன்று. மேலும் எம்ஜிஆருக்காக பின்னணிப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பின்னணி பாடிய ஒரே ஒரு பாடலும் இந்தப் பாடலாகத்தான் இருக்கும். "என்ன மேன் பொண்ணு நான் சும்மா சும்மா பார்க்காதே" என்று ஆரம்பமாகும் இப்பாடல். எம்ஜிஆரின் ஆஸ்தான ஆடை வடிவமைப்பாளரான எம்.ஏ.முத்துதான் இப்பாடல் காட்சிக்காகவும் ஆடை வடிவமைத்துக் கொடுத்தவர்.


எம்ஜிஆர்., பெண் வேடமிட்டு நடித்த அபூர்வ காட்சி என இந்த வீடியோ சமூகவலைதளங்களில் இப்போது திடீரென வைரலானது.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
யோகிபாபு நடித்த, 'மணி' படத்தின் உரிமை யாருக்கு?யோகிபாபு நடித்த, 'மணி' படத்தின் ... சந்திரமுகி பாணியில் பழிவாங்கும் சூர்ப்பனகை சந்திரமுகி பாணியில் பழிவாங்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Krish - Chennai ,இந்தியா
05 மார், 2020 - 04:08 Report Abuse
Krish புதுமை பித்தன் படத்தில் டி ஆர் ராஜகுமாரி நாடக பாடலில் பெண் வேஷம் போட்டு இருப்பார்.
Rate this:
karutthu - nainital,இந்தியா
04 மார், 2020 - 12:04 Report Abuse
karutthu எம் ஜி ஆர் என்ற பெயரில் ஒரு மேக்னெட்டிக் பவர் உள்ளது அது தான் அவர் திரைப்படத்துறையிழும், அரசியலிலும் ஒரு ஆளுமை மிக்கவராக , ஒரு ஜாம்பவான் போல இருந்தார் ......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in