சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்த பிரியா பவானி சங்கர், நடிகர் எஸ்.ஜே.சூர்யா உடன் 'மான்ஸ்டர்' என்ற படத்தில் நடித்தார். இருவரும் தற்போது 'பொம்மை' படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.
இதற்கிடையே, எஸ்.ஜே.சூர்யா, தனது காதலை சொன்னதாகவும், அதற்கு பிரியா பவானி சங்கர் மறுப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. இதனை மறுத்த சூர்யா, 'பிரியா நல்ல தோழி' என்றார். பிரியா தரப்பில் இதுவரை பதில் வராமல் இருந்த நிலையில், முதன்முதலாக விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், என்னையும், எஸ்.ஜே.சூர்யாவையும் பற்றி வெளியான வதந்திக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர் பதற்றமாகி பதில் சொன்னதால், இந்த விஷயத்தை பெரிதாக பேசினர். உண்மையில் எங்களுக்குள் அப்படி எதுவும் கிடையாது. கிசுகிசுக்களை பார்த்து எனது நண்பர்கள் கேலி செய்வதை எப்படி எதிர்கொள்வது என்ற கவலை மட்டுமே எனக்குள் இருந்தது,' என பிரியா விளக்கமளித்துள்ளார்.