சினிமாவில் ஒவ்வொரு நாளும் போராட்டமே - ஐஸ்வர்ய லட்சுமி | ரூ.400 கோடி வட்டிக்கு வாங்கி எடுக்கப்பட்ட பாகுபலி : ராணா தகவல் | அடுத்த மாதம் ஜென்டில்மேன் 2 பட இசையை துவங்கும் கீரவாணி | ஆல்கஹால் தேவையில்லை.. டானிக்கே போதும் ; அதா ஷர்மாவின் அதிரடி | ஆந்திர முதல்வர் சுயசரிதையை படமாக்கும் ராம்கோபால் வர்மா | மகேஷ்பாபு படத்தில் மோகன்லாலை இணைக்க முயற்சி செய்யும் ராஜமவுலி | மலையாள பட விழாவில் விஜய் தேவரகொண்டா பட இயக்குனரை விமர்சித்த அல்லு அரவிந்த் | இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து மாறியிருக்கிறது - திரைப்பிரபலங்கள் இரங்கல் | வெற்றிகரமான 'வாரம்' இல்லை, வெற்றிகரமான 'நாட்கள்' மட்டுமே.. | ஆதிபுருஷ் படத்தின் புதிய டிரைலர் அப்டேட் |
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத் வாழ்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா ரசிகர்களும் அதையே விரும்புக்கின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் படமும் ஏப்ரல் 9ம் தேதி தான் ரிலீசாகிறது. படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரொடேக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே சூரரைப் போற்று படமும், மாஸ்டர் படமும் ஒரே நாளில் வெளியானால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் சூர்யா - ஹரி 6வது முறையாக இணைய உள்ள அருவா படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அறிவித்துள்ளார். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தையும் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடவே படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த இரு படங்களும் மோதும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே சூர்யா ஒரே ஆண்டில் விஜய் மற்றும் அஜித்துடன் நேரடியாக மோதிப்பார்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதையே அவரது ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.