காதலியை கரம்பிடிக்கும் நரேஷ் | நீண்ட இடைவேளைக்குப் பின் சின்னத்திரையில் மீண்டும் களமிறங்கும் சாதனா | சுரேஷ்கோபி படம் மூலம் மீண்டும் மலையாளத்திற்கு திரும்பிய அனுபமா பரமேஸ்வரன் | நேஹா சக்சேனாவும் பரபரப்பு வளையத்தில் சிக்குவாரா? | இறுதிக்கட்டத்தை எட்டிய அர்ஜுன் - நிக்கி கல்ராணியின் மலையாள படம் | 35 வருடங்களுக்குப் பிறகு வைரலான மோகன்லால் - மம்முட்டி தம்பதி | ஆதிபுருஷ் படத்திற்காக 10 ஆயிரம் டிக்கெட்டுகளை கொடுக்கும் ரன்பீர் கபூர்! | லியோ படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் டென்சில் ஸ்மித் | சாண்டி படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா | விக்ரம் படத்தை வெளியிடும் விஜய் பட தயாரிப்பாளர்! |
ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம் 'ஜிப்ஸி'. இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடாஷா சிங் நடித்துள்ளார். பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு வரும் 6ம் தேதி படம் ரிலீசாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஸ்னீக்பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. சென்சார் அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்ட காட்சியை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அந்த காட்சியில் அரசாங்கம், காவல்துறை, நீதித்துறை என அனைத்தையும் விமர்சித்துள்ளனர்.
மேலும் அதில், துணை முதலமைச்சர் வருகையை முன்னிட்டு நடைபாதையில் படுத்திருக்கும் மக்களை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரிக்கின்றனர். அதில் ஜீவாவும் இருக்கிறார். அவரை மாவோயிஸ்ட் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அப்போது பேசப்படும் பல வசனங்கள் சர்ச்சைக்குரிய வகையில் அமைந்துள்ளன. உதாரணமாக "நீதித்துறை சொல்வதை காவல்துறை கேட்பதில்லை, காவல்துறை சொல்வதை நீதித்துறை கேட்பதில்லை, மக்கள் சொல்வதை எந்த துறையும் கேட்பதில்லை" எனும் வசனம் உள்ளது.
நிச்சயம் இக்காட்சிகள் படத்தில் இடம் பெற்றால் படக்குழு பல வழக்குகளை சந்திக்க நேரிடும். இதனாலேயே படத்தில் இடம்பெறாத இந்த காட்சியை ஸ்னீக்பீக்காக யூடியூபில் வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.