Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே இடத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ ஆலயம் கட்ட ராகவா லாரன்ஸ் முடிவு

03 மார், 2020 - 12:51 IST
எழுத்தின் அளவு:
One-temple-for-Hindu-,-Muslim-and-Christians-says-Raghava-Lawrence

சினிமா மற்றும் சமூகப் பணிகளில் அதிக நாட்டம் கொண்டவர் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ். தனது அறக்கட்டளை மூலம் நிறைய உதவிகள் செய்து வருகிறார். இந்நிலையில், இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் ஆகிய அனைத்து மதத்தவரும் ஒன்றாக வழிபடக் கூடிய ஒரு கோவிலைக் கட்டப் போவதாக அறிவித்திருக்கிறார்.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் பிறந்த நாள் விழாவில் இந்த முடிவை எடுத்துள்ளார். இதுப்பற்றி சமூகவலைதளத்தில் லாரன்ஸ் பதிவிட்டு இருப்பதாவது : நாட்டில் பல்வேறு மதங்களாக மக்கள் பிரிந்து கிடக்கின்றனர். அதனால், அனைத்து மதத்தினரையும் ஒன்றாக இணைக்க வேண்டும். அதற்கு, ஒவ்வொருவருடைய மனதிலும் மாற்றங்களை உருவாக்க வேண்டும். அதற்கு முன்னோட்டமாக, இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் என எல்லா மதத்தவரும் இணைந்து வணங்கக் கூடிய ஆலயம் ஒன்றைக் கட்ட முடிவெடுத்துள்ளேன். இந்த கோவிலில் மிகப் பெரிய அன்னதானக் கூடம் ஒன்று ஏற்படுத்தப்படும். அந்தக் கூடத்தில், அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தக் கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்படும். விரைவில் இதற்கான பணிகள் துவங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய
அப்துல் காலிக்கை அறிமுகப்படுத்த காத்திருக்கிறேன்: வெங்கட் பிரபுஅப்துல் காலிக்கை அறிமுகப்படுத்த ... அஜித்துக்கு வில்லன் நவ்தீப்? அஜித்துக்கு வில்லன் நவ்தீப்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (22)

sahayadhas - chennai,இந்தியா
04 மார், 2020 - 11:30 Report Abuse
sahayadhas மதத்தை நம்பி வாழ்க்கை நடத்துபவருக்கு இது தெரிந்ததும் உம் மீது பாய்வர். CBI ரைடும் வரலாம்.
Rate this:
ARUMUGAKANI VELSAMY - tirunelveli,இந்தியா
04 மார், 2020 - 11:00 Report Abuse
ARUMUGAKANI VELSAMY தம்பி லாரன்ஸ், முதலில் இந்து கோவிலில் படைக்கும் பிரசாதத்தை கிருஸ்தவர்கள் சாப்பிடுவார்களா என்று கேள். அவர்கள் சரி என்று சொன்னால் உன் திட்டத்தை செயல் படுத்து.
Rate this:
வால்டர் - Chennai,இந்தியா
04 மார், 2020 - 10:47 Report Abuse
வால்டர் தளபதி விஜய் என்ன சொல்லி இருக்காரு? கோவில்கள் கட்டுற வேலையை விட்டுட்டு பள்ளிக்கூடங்கள் கட்டலாம். நிறைய பேருக்கு உபயோகமா இருக்கும்னு. கூத்தாடிங்களுக்குள்ளேயே இவ்ளோ பிரச்சினையா. வேற வேலை வெட்டி இருந்தா பாருங்கடா. சமூக சிந்தனையோடு நல்ல படங்கள் குடுக்கற வழிய பாருடா வெட்டிப்பயலே.
Rate this:
s vinayak - chennai,இந்தியா
04 மார், 2020 - 09:24 Report Abuse
s vinayak முதலில் ராகவனா? லாரன்ஸா? என்பதை பெயரில் சரிசெய்யவும். தெளிவு படுத்தவும். பிறகு பார்த்துக்கொள்ளலாம். இந்துக்களுக்கு என்று சில விதிமுறைகள் உண்டு. ஏதாவது ஆரம்பித்து பிக்னிக் ஸ்பாட்- ஆக மாற்றி பணம் பார்க்க வேண்டாம். செய்யும் தொழிலே தெய்வம். அதை சரிவர செய்யவும்.
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
04 மார், 2020 - 08:05 Report Abuse
Natarajan Ramanathan வேண்டாத வேலை. இன்றைய செய்தியில் நாசா செல்ல வாய்ப்பு, பணம் இன்றி தவிப்பு என்றும் ஒரு செய்தி வந்துள்ளது. முடிந்தால் அவருக்கு உதவி செய்யவும்.
Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in