‛பொன்னியின் செல்வன்' பார்க்க மாட்டேன்: திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி | வெகுமதியாய் கொடுத்த ரூபாயை பிரேம் போட்டு வச்சுருக்கேன்: 'ருக்மணி' பாபு | தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி படம்! | ரீ என்ட்ரி குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்த மீரா ஜாஸ்மின்! | ஆர்யா - ஹிப் ஹாப் ஆதி படங்களின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? | எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியுடன் வெளியான பொம்மை டிரைலர்! | டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற சூர்யா - ஜோதிகா! | தருமை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ரஜினிகாந்தின் இளைய மகள் | லியோ படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | விக்ரம் பிரபு புதிய படத்தின் ரிலீஸ் தேதி இதோ! |
இயக்குனர், நடிகரான சசிகுமார் இதுவரை 18 படங்கள் நடித்து முடித்து விட்டார். அவர் நடிக்கும் 19வது படம் ராஜவம்சம். சசிகுமார் படங்கள் என்றால் கிராமத்து பின்னணி, உறவினர்கள் கூட்டம், அதற்குள் நட்பு, பகை, காதல் இந்த ஏரியா தான் சசிகுமாருக்கு வெற்றி ஏரியாவாக இருந்தது. ஆனால் அவர் வேறு ஜானர்களிலும் சில படங்கள் முயற்சித்து பார்த்தார். அவைகள் வெற்றி பெறவில்லை. அதனால் தன் பழைய பாணிக்கே திரும்பி விட்டார். அந்த வரிசையில் அடுத்து வரப்போகும் படம் ராஜவம்சம்.
சுந்தர்.சியிடம் உதவியாளராக இருந்த கதிர்வேலு இயக்கி உள்ளார். சுந்தர்.சி போன்றே பெரிய நட்சத்திர பட்டாளத்தை இயக்கி உள்ளார். படத்தில் நிக்கி கல்ராணி, ராதா ரவி, தம்பி ராமைய்யா, விஜய குமார், சதிஷ், மனோபாலா, சிங்கம் புலி, யோகி பாபு, கும்கி அஸ்வின், ஆடம்ஸ், சரவணா சக்தி, மணி சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ் கபூர், தாஸ், நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ், சமர், ரேகா, சுமித்ரா, நிரோஷா, சந்தான லட்சுமி, சசிகலா, யமுனா, மணி மேகலை, மீரா, லாவண்யா, ரஞ்சனா, ரஞ்சிதா, ரம்யா, தீபா உள்பட பலர் நடித்துள்ளனர்.
சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சிஎஸ் இசை அமைக்கிறார். படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. அதற்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது. ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.