ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் 1947 | கன்னடத்தில் திரிஷ்யம் 2 : பி வாசு இயக்குகிறார் | அகோரியாக அதிரவைக்கும் பாலகிருஷ்ணா | ரிலீஸ் தேதியுடன் ஜூனியர் என்டிஆரின் புதுப்பட அறிவிப்பு | ராதே ஷ்யாம் புதிய போஸ்டர் வெளியீடு | கர்ணன் - தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி | கொரோனாவிலிந்து மீண்டுவிட்டோம் - மாதவன் | சாந்தி வாழ்க்கை படம் துவங்கியது | தனுஷிற்கு ஜோடியாகும் உப்பெனா நாயகி | கபடி பயிற்சியில் துருவ் விக்ரம் |
டி.ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சார்மி. தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த அவர், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக திகழ்ந்தார். தற்போது பிரபல தெலுங்கு பட இயக்குனர் பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து பட தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் சார்மி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கொரானா பற்றி ஒரு டிக்டாக் வீடியோ செய்து பதிவிட்டார். அதில் கொரானா இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டது என கேலி செய்யும் வகையில் அவர் டிக்டாக் செய்திருந்தார்.
இதை பார்த்த நெட்டிசன்கள், சார்மியை வெளுத்து வாங்கிவிட்டனர். கொரானா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் சூழலில் இது போன்று கேலி செய்வது சரியானது அல்ல என சார்மியை அவர்கள் வசைபாடினர். இதையடுத்து அவர் அந்த வீடியோவை உடனடியாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார்.