அட்லீ - பிரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | கடைசி கட்ட ஓட்டத்தில் 'வாரிசு, துணிவு' | விஜய் 67ல் இணைந்த சஞ்சய் தத் - அடுத்தடுத்து வந்த அப்டேட்கள் | ஒழுங்கா வேலைய பாரு : ரசிகருக்கு ரஜினி அறிவுரை | திருப்பதி அருகே இந்தியன் 2 படப்பிடிப்பு : ஹெலிகாப்டரில் சென்று இறங்கிய கமல் | குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா நிறுவனம் | அமானுஷ்யத்தின் பக்கங்களை புரட்டும் ‛கருங்காப்பியம்' : டிரைலர் வெளியீடு | திருமணநாளில் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்திய எஸ்.ஏ.சந்திரசேகர் | வட இந்தியர்கள், தென்னிந்திய படங்களை விரும்பி பார்க்கிறார்கள்: சந்தீப் கிஷன் | 'விஜய் 67' காஷ்மீர் சென்ற த்ரிஷா, பிரியா ஆனந்த் |
பூஜா ஹெக்டே யார் என்று இங்குள்ள தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஞாபகம் வராது. 'முகமூடி' படத்தில் நடித்த பூஜா ஹெக்டே என்றால் 'முகமூடி' என்ற ஒரு படம் வந்ததா என்று கேட்பார்கள். மிஷ்கின் இயக்கிய 'முகமூடி' படம் என்றால் அப்படி ஒரு படத்தை மிஷ்கின் இயக்கினாரா என்று கேட்டாலும் கேட்பார்கள்.
'முகமூடி' படத்தில் முதலில் சூர்யா தான் நடிப்பதாக இருந்தது. நல்லவேளையாக அவர் மிஷ்கினிடமிருந்து தப்பித்துவிட்டார். அந்த வாய்ப்பு ஜீவாவுக்குப் போனது. அந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமானவர்தான் பூஜா ஹெக்டே. அதன் பின் டோலிவுட், பாலிவுட் என போய் இப்போது முன்னணி ஹீரோயினாகிவிட்டார்.
'சூரரைப் போற்று' படத்திற்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் விஜய் நடிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அந்தப் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கத்தான் பூஜா ஹெக்டேவிடம் பேசியுள்ளதாகச் சொல்கிறார்கள்.
'முகமூடி' படம் வெளிவந்து 8 ஆண்டுகள் ஆகப் போகிறது. அவ்வளவு இடைவெளியில் மீண்டும் தமிழுக்கு வருவாரா பூஜா ஹெக்டே. தமிழில் தற்போது ஹீரோயின்களுக்குப் பஞ்சம் உள்ளது. அதனால் பூஜா மீண்டும் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.