Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கன்னிமாடம், திரௌபதி - படங்களைப் பாராட்டுவதில் பாகுபாடு

02 மார், 2020 - 16:38 IST
எழுத்தின் அளவு:
draupadi---kanni-maadam-movie

தமிழ் சினிமாவைக் கடந்த சில ஆண்டுகளாக சாதிப் பற்று பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு பிரச்சினை தமிழ் சினிமாவில் வருவதற்கு பா.ரஞ்சித் தான் காரணம் என சிலர் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக குற்றம் சாட்டி வருகிறார்கள்.

அவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள், அவர் தயாரிப்பில் வெளிவந்த படங்கள் ஆகியவற்றில் அவர் வைத்த கதைப் பின்னணி, கதாபாத்திரங்களில் எல்லாம் அவர் சார்ந்த சாதிப் பிரிவினரின் பார்வையில் அவர் சொன்னது தான் இப்போது மேலும் வேறு சாதி சார்ந்த படங்கள் வரக் காரணமாக அமைந்துவிட்டது என்கிறார்கள்.

கடந்த வாரம் வெளிவந்த 'திரௌபதி' படத்தை வேறு ஒரு சாதியினர் தங்கள் சாதியினர் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அளவிற்கு சாதிப்பற்று தமிழ் சினிமாவில் காலூன்ற ஆரம்பித்துவிட்டது.

பத்து நாட்களுக்கு முன்பு 'ஆணவக் கொலை' பற்றிய படமாக 'கன்னிமாடம்' படம் வந்தது. கடந்த வாரம் 'ஆணவக் கொலை' என்பதே திட்டமிட்ட சதி என சொல்லிய 'திரௌபதி' படம் வந்தது.

இந்த இரண்டு படங்களையும் பாராட்டுவதில் கூட ஒரு பாகுபாடு ஏற்பட்டுள்ளது. 'கன்னி மாடம்' படத்தை ஒரு சாதியினரும், 'திரௌபதி' படத்தை மற்றொரு சாதியினரும் தனித்தனியாகப் பாராட்டி வருகிறார்கள். அந்தப் படங்களில் பாராட்டும் அளவிற்கு என்ன விஷயம் இருந்தது என்பது தனிக்கதை.

ஆனால், சினிமாவில் சாதிப்பற்றை உருவாக்கியவர்களால், படத்தை ரசிக்கும் ரசிகர்களிடத்திலும் சாதிப்பற்று வர ஆரம்பித்துவிட்டது தமிழ் சினிமாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் சேதுபதி, சிம்புவை இயக்கும் சேரன்!விஜய் சேதுபதி, சிம்புவை இயக்கும் ... மீண்டும் தமிழுக்கு வருவாரா பூஜா ஹெக்டே ? மீண்டும் தமிழுக்கு வருவாரா பூஜா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

04 மார், 2020 - 13:10 Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ஆணவக்கொலை என்று பெயர் சூட்டி முன்னேறிய இந்து ஜாதி மக்களை வசைபாடி மகிழ்கிறார்கள். ஆனால் அதன் பின்னணியில் இவர்களின் சதி இருக்கிறது என்பதை தான் திரௌபதி படம் தோலுரித்து காட்டுகிறது
Rate this:
konanki - Chennai,இந்தியா
03 மார், 2020 - 14:44 Report Abuse
konanki அரசியல் கட்சிகள் ஊடகங்கள் தொடங்கி யதால் ஏற்படும் சமூக கேடுகளின் வெளிப்பாடு தான் இந்த திரைப்படங்கள்.
Rate this:
konanki - Chennai,இந்தியா
03 மார், 2020 - 14:42 Report Abuse
konanki தயவு செய்து திரௌபதி படத்தை ஜாதி அரசியலில் சிக்க வைத்து தவறு செய்த வக்கீல்கள்களை பத்திர பதிவு துறையின் குற்றங்களை மக்களின் கவனத்தில் இருந்து அகற்றி விடாதீர்கள்.
Rate this:
konanki - Chennai,இந்தியா
03 மார், 2020 - 14:40 Report Abuse
konanki கன்னி மாடம் தௌரபதி போன்ற படங்கள் வருவதற்கு காரணம் ஊடகங்கள் சமூக ஆர்வலர்கள், தி க வீரமணி சுப வீரபாண்டியன் திராவிட தலைவர்கள் கருணாநிதி கம்யூனிஸ்ட் கட்சிகள் தான். தமிழ் நாட்டில் ஜாதி கலவரங்கள் ஏற்பட்ட போதெல்லாம் யார் அரஜாகம் செய்தார்கள் யார் பாதிக்கப்பட்டார்கள் என்பதை நன்கு அறிந்தும் உண்மையை சொல்ல துணிவில்லாமல் 50 ஆண்டுகளாக செய்துவரும் பொய் பிரச்சாரமான பிராமணர்கள்/பிராமணியம் தான் ஜாதி கலவரங்களுக்கு காரணம் என்று கூசாமல் பொய் சொல்லி அரஜாகம் செய்தவர்களை தப்பிக்க விட்டனர். அதனால் ரன்ஜித் ஜி மோகன் 'போன்றவர்கள் தங்கள் பக்க நியாயத்தை திரைப்படம் மூலமாக தான் சொல்ல முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
04 மார், 2020 - 06:02Report Abuse
meenakshisundaramமிக மிக சரியான கருத்து, பிராமணர்களை எதிர்க்கவில்லை என்று சொல்லிக் கொண்டே ஜாதி வெறி (ப்ராம்மணார்க்கு எதிராக மட்டுமே) பிடித்தலையும் மேற்கொண்ட தலைகளும்(?) இன்னும்மாற்றப்படி துவேஷத்தை கிளப்பும் பயல்களுமே 'ரஞ்சித்' போன்றவர்கள் காசு பார்க்க உதவுகிறது. தமிழகத்தில் பிராமணர்கள் போற்றப்பட வேண்டும் ஆன்மிகம் அவர்களாலேயே நிலைக்கும் ,அன்றே தமிழகம் உருப்படும்...
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
03 மார், 2020 - 10:31 Report Abuse
Natarajan Ramanathan நான் ரஞ்சித் படம் பார்க்க மாட்டேன், அது தலைவர் ரஜினியே நடித்திருந்தாலும்.....
Rate this:
pattikkaattaan - Muscat,ஓமன்
03 மார், 2020 - 14:16Report Abuse
pattikkaattaan அவ்வளவு சாதி வெறி அவசியமில்லை .. சர்ச்சைக்குரிய படமாக இருக்கும் பட்சத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதற்காக பார்க்கலாம்.. அதை சரி என்று எடுத்துக்கொள்வதும், புறக்கணிப்பதும் நம் அறிவைப்பொறுத்ததே .. சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி பாடினார் , நாம்தான் கேட்பதில்லை...
Rate this:
S Ramkumar - Tiruvarur,இந்தியா
04 மார், 2020 - 10:04Report Abuse
S Ramkumarரஞ்சித் ஒரு சாதி வெறியர். கபாலி படத்தில் தேவை இல்லாமல் ஆண்டை நான் கோட் போட்ட என்ன, நான் போடுவேன். போன்ற வசனங்களை திணித்து இருந்தார். பின்னர் காலா படத்திலும் அதே தான். கருப்பு என்று லூஸ் டாக் செய்து இருந்தார். பின்னர் ராஜராஜ சோழன் தான் தமிழகத்தின் இந்த நிலைக்கு காரணம் என்றார். பஞ்சமி நிலம் என்றார். இயக்குனர் திலகம் கோபால கிருஷ்ணன் இயக்கி நத்தையில் முத்து என்று ஒரு படம். கே.ஆர்.விஜயாவின் நூறாவது படம். வேதம் புதிது அதுவும் சாதியை பற்றி பேசும் படம். அனால் நன்றாக இருக்கும். எல்லோரும் பார்த்து பாராட்டை பெற்ற படங்கள். அவற்றை பார்த்து ரஞ்சித் திருந்தட்டும்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Varisu
  • வாரிசு
  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in