Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்.சுந்தர்ராஜன் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார்களா ரஜினி ரசிகர்கள்?

01 மார், 2020 - 13:52 IST
எழுத்தின் அளவு:
Did-Rajini-fans-spread-rumour-about-R.Sudarrajan

தமிழ்நாட்டு அரசியல் களம் கொஞ்சம் கொஞ்சமா சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்களே உள்ள நிலையில் சிலரது அரசியல் வருகை வரும் தேர்தலில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்து பார்லிமென்ட் தேர்தலை சந்தித்தார். ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சி ஆரம்பித்துவிடுவார் என்று சொல்லி வருகிறார்கள்.

ரஜினிகாந்த் அவ்வப்போது அவருடைய வீட்டின் முன்பும், விமான நிலையத்தின் முன்பும், மேடைகளில் பேசுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் ரஜினிகாந்த் பற்றி அதிமுக கட்சி விழாவில் அதன் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவரான திரைப்பட இயக்குனர், நடிகர் ஆர்.சுந்தர்ராஜன், மிகவும் தரக்குறைவாகப் பேசியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

“எம்ஜிஆர் சீப் மினிஸ்டர் ஆனாரு, எல்லா நடிகனுக்குமே அந்த ஆசை வந்துடுச்சி. அவனுக்கு அருகதை இருக்குதா இல்லையாஎன்றெல்லாம் அவன் யோசிக்கிறதேயில்லை. அவரு சீப் மினிஸ்டர் ஆனாரு, அவரும் நடிகன், நானும் நடிகன்தானேன்னா அது வேற. ஒரே ஒரு எம்ஜிஆர் தான். அந்த இடத்துக்கெல்லாம் நீங்க போகவே முடியாது. செக் போஸ்ட்லயே காலி ஆகிடுவீங்க.

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிச்சி, முதல் கூட்டம் கோயம்பத்தூர்ல போட்டு, திருப்பூர் வரதுக்குள்ளயே செத்துப் போயிடுவாரு. அவ்ளதான் உடம்பு கன்டிஷன். நாமெல்லாம் அவங்ககிட்ட வேலை வாங்குனவங்க. நின்னு பேசக் கூடிய அளவுக்கு அருகதை இல்லாதவர்கள். தமிழ்நாட்டைப் பத்தி பேசறதுக்கே அருகதை இல்லை. அவங்களுக்கெல்லாம் அந்த ஆசை வருது,” என மிகவும் கீழ்த்தரமாகப் பேசினார். அந்தப் பேச்சுக்கு கூட்டத்தில் இருந்தவர்களும் கைத்தட்டியது ஒரு பேரதிர்ச்சி.

ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் ரஜினிகாந்த், 1989ம் ஆண்டில் வெளிவந்த வெள்ளிவிழாப் படமான “ராஜாதி ராஜா” என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

ஆர்.சுந்தர்ராஜனின் கீழ்த்தரமான பேச்சிற்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் பதிலடி கொடுத்ததாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. ரஜினி, செத்துப் போயிடுவார் என்றுதான் சுந்தர்ராஜன் பேசினார். ஆனால், சுந்தர்ராஜான் செத்துப் போய்விட்டார் என்ற சமூக வலைத்தளங்களில் பரப்பியதே ரஜினி ரசிகர்கள் தான் என ஒரு பரபரப்பு கடந்த இரண்டு நாட்களாக உலா வருகிறது.

தமிழ்நாட்டு அரசியலும் சமூக வலைத்தளங்களில் தரக் குறைவாகப் போய்க் கொண்டிருப்பதையே இது காட்டுகிறது. ஒரு தரக் குறைவுக்கு இன்னொரு தரக் குறைவுதான் பதிலடி எனச் செயல்பட்டு வருகிறார்கள். இப்படியான சர்ச்சைகள், சச்சரவுகள், தரக்குறைவான செயல்பாடுகள், அதற்கான பதிலடிகள் என அடுத்த வருடம் வர உள்ள தேர்தலுக்குள்ளாக அதிகமாகும் என்று சொன்னால் அதில் ஆச்சரியமில்லை.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
மாஸ்டர் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவுமாஸ்டர் படப்பிடிப்பு இன்றுடன் ... 90 எம்எல் - ஓடாத படத்திற்கு ஒரு வருட கொண்டாட்டம் 90 எம்எல் - ஓடாத படத்திற்கு ஒரு வருட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

VIDHURAN - chennai,இந்தியா
03 மார், 2020 - 08:38 Report Abuse
VIDHURAN சுந்தரராஜன் கூறியதாக சொல்லப்பட்டது நிஜமா பொய்யா என்பது இருக்கட்டும். ஆனால் பிரபலங்கள் இப்படி அசிங்கமமாக பேசுவது அவர்களை இன்னும் கீழே கொண்டு சென்று விடும்.
Rate this:
S Bala - London,யுனைடெட் கிங்டம்
02 மார், 2020 - 15:20 Report Abuse
S Bala இவனெல்லாம்.....
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
02 மார், 2020 - 11:14 Report Abuse
Natarajan Ramanathan அவன் செத்துப்போயிடுவான் என்று இவனும், இவன் செத்தே போய்விட்டான் என்று அவன் ரசிகர்களும் எழுதுகிறார்கள். இரண்டையும் ஒரு டெட்பாடியை கட்சி தலைவனாகவே கொண்டதுகள் ரசிக்குது.
Rate this:
R.BHAGYARAJ - coimbatore,இந்தியா
02 மார், 2020 - 11:11 Report Abuse
R.BHAGYARAJ ஓவர் பேச்சு உன் உடம்புக்கு ஆகாது சுந்தர் .ஜி ...........
Rate this:
R.Selvaperumal - kuwait,குவைத்
02 மார், 2020 - 10:52 Report Abuse
R.Selvaperumal சுந்தர்ராஜன் அவர்களே, தயவுசெய்து கண்ணியமாக பேசுங்கள் ...உங்கள் மீது மிகுந்த மதிப்பு இருக்கிறது அதை கெடுத்து கொள்ள வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம் ......
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in