கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
மதுரை வேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள் நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்று வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தனுஷ் தான் கஸ்தூரிராஜாவின் மகன் என்பதற்கான ஆதாரங்களை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்தார். இதனால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆனால் தனுஷ் தாக்கல் செய்த ஆதாரங்கள் போலியானவை என்று கதிரேசன், மீனாட்சி தம்பதிகள் மதுரை மாவட்ட 6வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், தனுஷின் பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்யுறுமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.